விஜய் தொலைக்காட்சியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. கிட்டத்தட்ட 95 நாட்களை கடந்த நிலையில் சிபி பிக்பாஸில் வழங்கப்பட்ட 12 லட்ச ரூபாய் பரிசுத் தொகையை பெற்றுக்கொண்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். 

முன்னதாக அமீர் பிக்பாஸ் இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்ற நிலையில் போஸ் தமிழ் சீசன் 5 போட்டியின் இறுதிப் போட்டியாளர்கள் யார்? யார்? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த முறை பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது. அதில் குறிப்பிடப்படும் போட்டியாளர் தான் பிரபல கானா பாடகி இசைவாணி. இந்த பிக்பாஸில் 50 நாட்கள் வரை விளையாடிய இசைவாணி வாரங்களுக்கு முன்பு எலிமினேட் செய்யப்பட்டார். 

தொடர்ந்து வழக்கம்போல் காஸ்ட்லேஸ் கலெக்டிவ் இசைக்குழுவுடன் இணைந்து மார்கழியில் மக்கள் இசை உள்ளிட்ட மேடை நிகழ்ச்சிகளில் பாடி மக்களை மகிழ்வித்து வந்தார். இந்நிலையில் பாடகி இசைவாணி தனது முன்னாள் கணவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்ற பிறகும் தனது பெயரை பயன்படுத்தி சமூகவலைத்தளங்களில் பலரிடம் பணம் மோசடி செய்துள்ளதாக இசைவாணி அவரிடம் தெரிவித்துள்ளார். 

விவாகரத்துக்கு பிறகும் சோஷியல் மீடியாவில் தன்னை அவரது மனைவி என்ற தெரிவித்து பல மேடை நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட் முன்பதிவு செய்து தருவதாகவும், நிகழ்ச்சிகளில் பாட வைப்பதாகவும் கூறி பண மோசடி செய்துள்ளார். இந்த நிலையில், பணத்தை இழந்தவர்கள் தன்னிடம் வந்து பணத்தை திருப்பி கேட்பதாகவும் இதுகுறித்து முன்னாள் கணவரிடம் கேட்டபோது, “முகத்தில் ஆசிட் வீசி விடுவேன்” என்று மிரட்டுவதாகவும் இசைவாணி இந்த புகாரில் தெரிவித்துள்ளார்.