கொரோனா வைரஸ் தொற்றின் முதல் அலையின் சமயத்தில் அமேசான் பிரைம் வீடியோ வில் வெளிவந்த ஆன்தாலஜி திரைப்படம் புத்தம் புது காலை. ஒரு திரை உலகின் முன்னணி இயக்குனர்களான கௌதம் வாசுதேவ் மேனன் சுதா கொங்கரா ராஜீவ்மேனன் கார்த்திக் சுப்பராஜ் மற்றும் சுகாசினி மணிரத்தினம் ஆகிய ஐந்து இயக்குனர்களின் இயக்கத்தில் 5 வித்தியாசமான கதை களங்களை கொண்டு வெளிவந்த புத்தம் புது காலை அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது.

புத்தம் புது காலையின் வெற்றியைத் தொடர்ந்து இதேபோல் கொரோனா சூழ்நிலையை சுற்றிய கதை களங்களை மையப்படுத்தி ரசிகர்களுக்கு நேர்மறையாக புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் தயாராகியுள்ளது புத்தம் புது காலை விடியாதா. புத்தம் புது காலை என் தொடர்ச்சியாக தயாராகியுள்ள புத்தம் புது காலை விடியாதா படத்திலும் ஐந்து எபிசோடுகள் இடம்பெற்றுள்ளன.

பிரபல இயக்குனர்களான பாலாஜி மோகன், ஹலிதா ஷமீம், மதுமிதா பாலசுந்தரம், சூரிய கிருஷ்ணா மற்றும் ரிசார்ட் ஆண்டனி ஆகியோர் இயக்கத்தில் முன்னணி நடிகர்களான ஜோஜு ஜார்ஜ், நதியா, அர்ஜுன் தாஸ், லிஜோமொள் ஜோஸ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, கௌரி கிஷன், மணிகண்டன், விஜி சந்திரசேகரன், டிஜே அருணாச்சலம், முன்னணி ஸ்டன்ட் இயக்குனர் திலீப் சுப்பராயன், சனந்த், அன்பு தாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

முன்னதாக வெளிவந்த புத்தம் புது காலை விடியாதா டீசர் மற்றும் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. வருகிற ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் விருந்தாக அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீஸாகவுள்ள புத்தம் புது காலை முடியாதா படத்தின் டைட்டில் பாடல் தற்போது வெளியானது. இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்து பாடி நடித்துள்ள இந்தப் பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அசத்தலான அந்த பாடல் இதோ...