திருமணமான காதலனை அடைவதற்காக தன்னுடைய முழு சொத்தையும், காதலனின் மனைவிக்கு எழுதி கொடுத்த புதிய காதலியால் பரரபப்பு ஏற்பட்டது.

திரைப்படங்கள் சில வித்தியாசமான கதைகளை எடுப்பது உண்டு. அப்படியா சினிமாவில் வரும் கதைகள் சில நேரங்களில் நமது வாழ்க்கையிலும் நடப்பது அரிதான ஒரு விசயமாக இருக்கிறது. அப்படி, சினிமாவில் வந்த ஒரு கதை தான், தற்போது ஒருவரின் வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது.

அதாவது, பாலிவுட் திரைப்படமான “ஜூடாய்” (judaai) படத்தின் கதையைப் போன்ற ஒரு சம்பவம், அப்படியே நிஜத்தில் நிகழ்ந்திருக்கிறது. இது ஒரு முக்கோண காதல் கதை.  

மத்திய பிரதேசம் மாநிலத்தின் தலைநகரில் தான், இப்படி ஒரு வித்தியாசமான காதல் கதை நடந்திருக்கிறது.

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சரவணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவருக்கு கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. தற்போது, இவருக்கு மனைவி உள்ள நிலையில், 16 வயதில் ஒரு மகளும், 12 வயதில் ஒரு மகளும் உள்ளனர். அந்த இரு மகள்களும், அங்குள்ள பள்ளியில் படித்து வருகின்றனர்.

42 வயதாகும் சரவணன், அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் நீண்ட காலமாக பணியாற்றி வருகிறார். அதே நிறுவனத்தில், 54 வயது பெண் ஒருவரும் பணியாற்றி வருகிறார். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், அந்த 54 வயது பெண்ணின் கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து, அந்த பெண் ஆண் துணை இல்லாமல் தனிமையில் வாடத் தொடங்கினார்.

இதனையடுத்து, அலுவலகத்தில் தன்னுடன் பணியாற்றும் 42 வயதாகும் சரவணன் உடன் காதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, 42 வயதாகும் சரவணனும், 54 வயது பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில், அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

ஒரு கட்டத்திற்கு மேல் சரவணன், அந்த பெண்ணின் வீட்டிற்கே சென்று உல்லாச வாழ்க்கை வாழ ஆரம்பித்தார். அந்த பெண்ணும், தன்னுடனேயே தங்கிவிடும்படி, தனது காதலன் சரவணனிடம் கெஞ்சியிருக்கிறாள். தொடக்கத்தில் அதனை ஏற்றுக்கொள்ளாத சரவணன், போக போக தனது காதலி வீட்டில் தங்கத் தொடங்கி உள்ளார்.

இதனால், வீட்டில் சரவணன் மற்றும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. இந்த சண்டை உச்சம் பெற்ற நிலையில், சரவணனின் 16 வயது மகள், அங்குள்ள நீதிமன்றத்தில், தனது பெற்றோரின் சண்டை குறித்து குறிப்பிட்டு அவர்களது பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும் படி, மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கணவன் - மனைவி இருவரையும் கவுன்சிங் வரும் படி உத்தரவிட்டது. அதன் படி, கணவன் - மனைவி இருவரும் கவுன்சிலிங் சென்றனர். தொடர்ச்சியாக, அவர்களிடம் 3 கட்ட கவுன்சிலிங் நடைபெற்றது. 

அப்போது, ​​கணவரின் காதல் விவகாரம் தனது அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெண்ணுடன் நடந்து வருவது தெரிய வந்தது. அந்தப் பெண்ணும் தன் கணவனை விட வயதானவள் என்பதும், கணவனும் - காதலியும் ஒன்றாக வாழ விரும்புகிறார்கள் என்றும், அதனை மனைவி ஏற்க விரும்பவில்லை என்பதே சண்டைக்கான காரணமாக கண்டுபிடிக்கப்பட்டது.

அதே நேரத்தில், காதலன் சரவணன், தமது மனைவியை விட, தனது காதலியுடனே வாழ விரும்பினார். இதனால், சரவணனின் காதலி தனது முழு சொத்தையும் காதலனின் மனைவி மற்றும் அவரது குழந்தைகளுக்குக் கொடுக்க ஒப்புக்கொண்டார். 

இதற்காக, காதலி தனது காதலனின் மனைவிக்கு ஒரு கோடி சொத்துக்களைக் கொடுக்க சம்மதம் தெரிவித்தார். அதன் படி, சுமார் 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீடு, 27 லட்சம் ரூபாய் பணம் உள்ளிட்டவற்றைக் காதலி, தனது காதலனின் மனைவிக்கு அளித்தார். அதன் பிறகே, தனது காதலனை அவர் காணவும் அவர் சம்மதம் தெரிவித்துள்ளார்.

மேலும், சரவணனின் மனைவியின் கருத்துப் படி, திருமணமான பல வருடங்களுக்குப் பிறகு, கணவன் - மனைவி இடையே நல்லவிதமான சுமூக உறவு இல்லை என்றும், அதனால் அவருடன் வாழ்வது அவளுக்குப் பிடிக்கவில்லை என்றும், ஆலோசனை வழங்கியவர்களிடம் அவர் கூறியதாகவும் தெரிகிறது. 

இதில், முக்கியமாக காதலன் சரவணனின் இரு மகள்களின் எதிர்காலத்தை மேம்படுத்துவதில், அவர்களது எதிர்கால வாழ்க்கையை நல்ல முறையில் உருவாக்க இந்த பணம் செலவு செய்ய முடிவு செய்யப்பட்டது.

ஆனால், சரவணனின் இரு மகள்களும் பெற்றோர்களைப் பிரித்து விடாமல், ஒன்று சேர்க்கும் படி கெஞ்சியதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கு, அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.