மனைவியுடன் 26 நாடுகளுக்கு இன்ப சுற்றுலா சென்ற கேரளாவைச் சேர்ந்த டீ கடைக்காரரான கேஆர் விஜயன் மாரடைப்பால் உயரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த 71 வயதான கேஆர் விஜயன், தனது மனைவி மோகனா உடன் வசித்து வந்தார். 

கணவன் - மனைவி இருவரும் இணைந்து கொச்சியில் ஸ்ரீ பாலாஜி காபி ஹவுஸ் என்கிற பெயரில், ஒரு சிறிய டீ கடை ஒன்றை, கடந்த 47 ஆண்டுகளாக நடத்தி வந்தனர்.

மிகவும் அந்நியோன்யமான தம்பதிபாக இவர்கள் வசித்து வந்திருக்கிறார்கள். இப்படியா நிலையில் தான், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, “நாம் இருவரும் சேர்ந்து பல்வேறு வெளி நாடுகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டும்” என்கிற தனது ஆசையை, அவர் மனைவி  மோகனா, தனது கணவர் விஜயனிடம் கூறியிருக்கிறார்.

இதனைக் கேட்டுக்கொண்டு விஜயன், மனைவியின் ஆசையை நிறைவேற்றி வைப்பதாக அவருக்கு வாக்கு கொடுத்திருக்கிறார்.

இதனையடுத்து, அவர் தனது டீ கடையில் தினமும் கிடைக்கும் வருமானத்தில் ஒரு சிறு பகுதியையான 300 ரூபாய் பணத்தை தினமும் அவர் சேர்த்து வைக்கும் வகையில் தனது மனைவியிடம் தனியாக கொடுத்து வைத்து அந்த தம்பதியினர் சேகரித்து வந்தனர்.

இப்படியாக, அந்த தம்பதியினர் வருமானத்தில் 300 ரூபாயை தினமும் சேர்த்து வைக்கத் தொடங்கி நிலையில், கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை அவர்கள் மேற்கொண்டனர். 

அதன்படி, எகிப்து நாட்டுக்கு முதன் முதலில் அவர்கள் சென்றனர். அதன் தொடர்ச்சியாக, சேமிப்பு மற்றும் சிறு கடன்களின் உதவிகளுடன்  விஜயன் - மோகனா தம்பதி கடந்த 14 ஆண்டுகளில் 26 நாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்தனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த தம்பதியரின் பயணத்திற்கு தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா, உதவி புரிந்தார். அதன் பிறகே, விஜயன் - மோகனா தம்பதியின் சுற்றுப்பயணங்கள் குறித்து தேசிய அளவில் பலருக்கு தெரிய வந்தது. அவர்கள் பற்றிய செய்திகள் எல்லாம், இந்தியாவையும் தாண்டி, பல உலக நாடுகளும் அவர்களை பற்றி வெளிச்சம் போட்டு காட்டியது.

தொடர்ந்து, இந்த தம்பதியனர் அமெரிக்கா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, பிரேசில், அர்ஜென்டினா மற்றும் பெரு போன்ற பல்வேறு நாடுகளுக்கு இந்த தம்பதியினர் சென்று வந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் தான், டீக்கடை நடத்தி உலகின் பல நாடுகளுக்கு சுற்றுலா சென்று பிரபலமான விஜயன், கொச்சியில் நேற்றைய தினம் திடீரென்று மாரடைப்பால் உயிரிழந்தார். 

விஜயன் கொச்சியில் நேற்று மாரடைப்பால் காலமானார் . அவரது இறப்புக்கு கேரள சுற்றுலாத் துறை உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, உயிரிழந்த விஜயன் தனது மனைவி மோகனாவுடன் கடைசியாக கடந்த மாதம் 21 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை ரஷியாவுக்கு சுற்றுலா சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.