“டிக் டாக்ல வருபவன் அடிக்கடி நம்ம வீட்டுக்கு ஏன் வரான்” என்று, மனைவியை கண்டித்ததால், கள்ளக் காதலால் மனைவி ஒருவர் தனது கணவனை கொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஹரோக்யதனஹள்ளியில், 37 வயதான நேத்ரா என்ற பெண், தன்னுடைய கணவர் ஸ்வாமிராஜ் உடன் வசித்து வந்தார்.

கணவர் ஸ்வாமிராஜ், வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் இருந்து வந்த 37 வயதான நேத்ரா, டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு தனது நேரத்தைப் போக்கி வந்திருக்கிறார்.

இப்படியான சூழலில், நேத்ராவுக்கு, டிக் டாக் வீடியோவில் வரும் பரத் என்ற இளைஞனுடன் அறிமுகம் ஏற்பட்டு நட்பாகப் பழகி வந்துள்ளனர்.

இதனால், அந்த பெண் நேத்ரா, அடிக்கடி பரத்தை சந்தித்துத் தனிப்பட்ட முறையில் பேசி வந்திருக்கிறார். 

இப்படியான சந்திப்பு, அவர்களுக்குள் அடிக்கடி நிகழவே, இந்த நட்பு அவர்களுக்குள் நாளடைவில் கள்ளக் காதலாக மாறி உள்ளது.

அதன் பிறகு, நேத்ரா, தனது கணவனுக்குத் தெரியாமல் கள்ளக் காதலன் பரத்துடன் தனியாக வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அடிக்கடி உல்லாசம் அனுபவித்து ஒரு உல்லாச வாழ்க்கையே வாழ்ந்து வந்துள்ளனர். 

ஒரு கட்டத்தில் மனைவியின் கள்ளக் காதல் விசயம், அந்த கணவருக்குத் தெரிய வந்த நிலையில், கடும் அதிர்ச்சியடைந்த அவர், தனது மனைவி நேத்ராவை அழைத்துக் கண்டித்திருக்கிறார்.

இதனால், அவர் மனைவி நேத்ரா கடும் கோபம் அடைந்த, தனது கணவனை அவரின் காதலன் பரத் மற்றும் அவரின் நண்பர் விஜய் ஆகியோருடன் கூட்டுச் சேர்ந்து கொலை செய்ய திட்டமிட்டு உள்ளனர்.

திட்டமிட்டபடி, நேத்ரா தனது கள்ளக் காதலன் உடன் சேர்ந்து, ஒரு இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்திருக்கிறார்.

கணவனை கொலை செய்த பிறகு, இந்த கொலை விசயம் அந்த பகுதியில் உள்ள போலீசாருக்கு எப்படியோ தெரியவந்திருக்கிறது.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், நேத்ராவை பிடித்து விசாரித்து உள்ளனர். 

போலீசாரின் விசாரணையில், “சொத்துக்கு ஆசைப்பட்டும், அந்த காதலனின் பாலியல் உறவுக்கு ஆசைப்பட்டும் தனது கணவனை கொலை செய்துவிட்டதாக” நேத்ரா வாக்குமூலம் அளித்து உள்ளார். இது தொடர்பாக, போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.