தமிழ் சினிமாவின் முன்னணி கமர்சியல் கதாநாயகர்களில் ஒருவராக உயர்ந்துள்ள சிவகார்த்திகேயன், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் வகையிலான அழகான ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படங்களை வழங்கி தமிழ் சினிமாவின் இன்றியமையாத கதாநாயகனாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

முன்னதாக சமீபத்தில் வெளிவந்த சிவகார்த்திகேயனின் டாக்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று மெகா ஹிட்டானது. தொடர்ந்து இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ஏலியன் சயின்ஸ்ஃபிக்சன் திரைப்படமான அயலான் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

அடுத்ததாக லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்க இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் அனிருத் இசையமைத்துள்ள டான் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க, பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் S.J.சூர்யா, சமுத்திரகனி, சூரி, விஜய் டிவி சிவாங்கி, முனீஸ்காந்த், காளி வெங்கட், பாலசரவணன், RJ விஜய், ராஜூ ஜெயமோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார். டான் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நடிகர் பாலசரவணன் டான் படத்தில் தனது டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். விரைவில் டான் படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.