தமிழ் சினிமாவின் ஃபேவரட் நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார் யோகி பாபு. வெறும் காமெடியனாக மட்டுமல்லாமல் தனுஷின் கர்ணன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த யோகிபாபு, மண்டேலா திரைப்படத்தில் கதாநாயகனாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார்.

அடுத்ததாக தளபதி விஜய்யுடன் பீஸ்ட், தல அஜித்குமாருடன் வலிமை, சிவகார்த்திகேயனுடன் அயலான், விஷாலுடன் வீரமே வாகை சூடும் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் காசேதான் கடவுளடா ரீமேக் திரைப்படத்திலும் யோகிபாபு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த அக்டோபர் 29ஆம் தேதி மொத்த இந்திய திரையுலகிற்கும் அதிர்ச்சியளிக்கும் விதமாக கன்னட சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் புனீத் ராஜ்குமார் திடீரென மாரடைப்பால் காலமானார்.  புனீத் ராஜ்குமாரின் மறைவு திரையுலகைச் சேர்ந்த பல முன்னணி பிரபலங்களையும் பலகோடி ரசிகர்களையும் கண்ணீரில் மூழ்கடித்தது.

இந்நிலையில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் அவர்களின் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். நடிகர் புனீத் ராஜ்குமாருக்கு அஞ்சலி செலுத்தும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் யோகிபாபு பதிவிட்டுள்ளார். அந்த பதிவுகள் இதோ…