பள்ளி மாணவியை மிரட்டி 34 வயது கொடூர இளைஞன், பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் அடுத்து உள்ள நீலாம்பூர் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர், அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வருகிறார். 

அந்த மாணவிக்கு தாய் - தந்தை இல்லாத நிலையில், தனது பாட்டியுடன் வசித்து வருகிறார். தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதால், அந்த மாணவி தனது பாட்டியுடன் வீட்டில் இருந்து வந்தார்.

அப்போது, அந்த மாணவியின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த 34 வயதான சதீஷ், குடிப்பழக்கத்திற்கு முழு நேரமும் அடிமையாகிப் போனதாகக் கூறப்படுகிறது. இவர், 
எப்போதும் மது போதையில் தான் காணப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சிறுமியின் பாட்டி வீட்டில் இல்லாத நேரம் பார்த்து, குடிபோதையில் அங்கு வந்த சதீஷ், அந்த மாணவியின் வீட்டிற்குள் அத்து மீறி நுழைந்துள்ளார். உள்ளே வந்ததும், அந்த மாணவியின் வாயை பொத்தி, வீட்டிற்குள் தூக்கிச் சென்று, மிருகத் தனமாக அந்த மாணவியை அவன் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

அத்துடன், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து பிறகு, அந்த மாணவியை மிக கடுமையாக மிரட்டி உள்ளான். “இது குறித்து நீ யாரிடமாவது சொன்னால், உன்னை நான் கொலை செய்துவிடுவேன்” என்று அவன் மிட்டி உள்ளான். 

அப்போது, மாணவி வலியாலும், பயத்தாலும் அழுத சத்தம் கேட்க அந்த நேரம் பார்த்து, அவனும் அந்த மாணவியின் வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளான். அப்போது, அங்கு கூடிய அக்கம் பக்கத்தினர் சதீஷை திட்டி அங்கிருந்து விரட்டி அடித்து உள்ளனர்.

ஆனால், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 3 மாதங்கள் ஆனதால், தற்போது சிறுமி கர்ப்பிணியானர். இதனால், அக்கம் பக்கத்தினர் அங்குள்ள காவல் நிலையத்தில் சதீஷ் மீது புகார் அளிக்க சென்றனர். 

அதனை அறித்த சதீஷ் குடும்பத்தார்கள், சம்மந்தப்பட்ட சிறுமியுடனே இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து, திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர். 

ஆனால், இது தொடர்பாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் சிறுமி பயந்து தனக்கு அதில் விருப்பம் இல்லை என்பது போல் கூறியதாகத் தெரிகிறது. 

இதனையடுத்து, சிறுமியின் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்குள்ள மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்களுக்குத் தகவல் அளித்து உள்ளனர். இது தொடர்பாக அங்கு வந்த அன்பு குழந்தைகள் நல அதிகாரிகள், மாணவி கர்ப்பம் அடைவதற்கு சதீஷ் தான் காரணம் என்பதை உறுதி செய்தனர். 

மேலும், கர்ப்பம் அடைந்த மாணவியை அதிகாரிகள் அங்குள்ள அரசு காப்பகத்திற்கு அழைத்துச் சென்றனர். 

அத்துடன், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சதீஷ் மீது அங்குள்ள காவல் நிலையத்தில், குழந்தைகள் நல அதிகாரிகள் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தொடர்ந்த விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.