7 வயது மகளிடம், தந்தையே தவறாக நடந்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் அதுவும் மயிலாடுதுறையில் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மயிலாடுதுறையைச் சேர்ந்த சரவணன், ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) அப்பகுதியில் சமையல் வேலை பார்த்து வருகிறார். 

சரவணனுக்குத் திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

மகன், சரவணனின் தாயார் வீட்டில் வசித்து வரும் நிலையில், சரவணன் உடன் அவரது மனைவி மற்றும் 7 ஆம் வகுப்பு படித்து வரும் அவரது மகள் ஆகியோர் மயிலாடுதுறையில் வசித்து வந்து உள்ளனர்.

இந்த நிலையில் தான், 7 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு, கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைவு ஏற்பட்டு கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டு உள்ளார். 

இதையடுத்து, சிறுமியிடம் “என்ன செய்கிறது?” என்று, அவரது தாயார் விசாரித்து உள்ளார். 

அப்போது, தந்தை சரவணன் கடந்த 2 மாதங்களாக தன்னிடம் மிகவும் தகாத முறையில் பாலியல் ரீதியாக நடந்து கொண்டது” பற்றி கூறி அந்த சிறுமி அழுது உள்ளார். 

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சரவணன் மனைவி, தன் கணவன் சரவணன் மீது மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மனைவியின் புகார் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், தனது பெற்ற மகளிடம் கடந்த 2 மாதமாக பாலியல் தொந்தரவு கொடுத்து மிகவும் தகாத முறையில் நடந்துகொண்ட தந்தையான சரவணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை அதிரடியாகக் கைது செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்குப் பிறகு, அவரிடம் ஒப்புதல் வாக்கு மூலம் பெற்று, நீதிமன்றத்தில் முன்னிறுத்தினர். அதன் தொடர்ச்சியாக, நீதிமன்ற உத்தரவுப் படி, அவரை போலீசார் சிறையில் அடைத்தனர். 

இதனிடையே, 7 வயது மகளிடம், தந்தையே பாலியல் ரீதியில் மிகவும் தவறாக நடந்துகொண்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

அதே போல், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு வருகிற பிப்ரவரி 17 ஆம் தேதி வரை, நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கடந்த ஜனவரி 5 ஆம் தேதி அன்று பாபு, ஹெரோன்பால், அருளானந்தம் ஆகிய 3 பேர் புதிதாகக் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் கோபிசெட்டிபாளையம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். 

இந்த நிலையில், நேற்றைய தினம் அந்த 3 பேரும் காணொலி கூட்டரங்கு மூலம் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டனர். அப்போது, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான அருளானந்தம், ஹேரன் பால், பாபு ஆகியோரின் நீதிமன்ற காவல் பிப்ரவரி 17 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து, கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கில் ஏற்கனவே கைதான சபரிராஜன், திருநாவுக்கரசு, மணிவண்ணன், வசந்த்குமார், சதீஷ் ஆகிய 5 பேரை, வரும் 5 ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிறுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.