கடந்த ஜனவரி மாதம் 18-ம் தேதி, தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஆரோக்கிய ஜேசனின், மீன்பிடி விசைப்படகில் மெசியா, நாகராஜன், செந்தில்குமார், சாம்சன் டார்வின் ஆகிய நான்கு மீனவர்கள் மீன்பிடி அனுமதி பெற்று மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். 


கச்சத்தீவு பகுதியில் , மீன்பிடித்துக்கொண்டு இருக்கும் போது, இலங்கைக் கடற்படையினர் மீனவர்களை கடுமையாகத் தாக்கி விசைப்படகோடு நீரில் மூழ்கடித்துள்ளது உள்ளனர். நீரில் மூழ்கிய மீனவர்களை காப்பாற்ற சென்ற படகுகளையும் விரட்டி அடித்துள்ளனர். 


இந்த சம்பவம் குறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பட்டு இருந்தது.அதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ‘’ தமிழக மீனவர்கள் 4 பேர் கொல்லப்பட்டதற்கு  இலங்கை அரசுக்கு இந்தியா கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளது. இந்த  சம்பவம் ஏற்றுக் கொள்ள முடியாத செயல் என்று மிக தெளிவாக இலங்கை அரசிடம் கூறப்பட்டுள்ளது.” என்றார்.