3 வது மனைவியின் 13 வயது மகளை, தந்தையே தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்த வந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் தான், வேலியே பயிரை மேய்ந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த முருகேசன் என்பவருக்கு 2 மனைவிகள் இருக்கின்றனர். 

முருகேசனின் முதல் மனைவியான சாந்தி, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்து சென்று உள்ளார். 

இதனையடுத்து, கணவன் முருகேசன், கெளசல்யா என்ற பெண்ணோடு திருமண பந்தத்தில் இணைந்து வாழ்ந்து வந்திருக்கிறார். அதன் பிறகு, கெளசல்யாவின் சகோதரியான சுந்தரிக்கு சதீஷ் என்பருடன் திருமணம் நடந்து ஒரு பெண் குழந்தை இருந்து உள்ளது. 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், சதீஷ் கடந்த 2008 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார். இதனால், சுந்தரி தன் குழந்தையுடன் சகோதரியான கெளசல்யாவின் வீட்டில் தங்கி இருந்தார். அந்த நேரத்தில், சுந்தரிக்கு - முருகேசனுடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக, கணவனை இழந்த சுந்தரி, முருகேசனின் 3 வது மனைவியாகவே அந்த வீட்டில் வசித்து வந்து உள்ளார்.  

இந்த நிலையில், கடந்த ஆண்டு வந்த தீபாவளி பண்டிகையின் போது, சுந்தரியின் மகளுக்கு 13 வயது எட்டி உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், மகள் மீதே தந்தை முருகேசனுக்கு காமம் வந்துள்ளது. இதனால், 3 வது மனைவியின் 13 வயது மகள் வீட்டில் யாரும் இல்லாத சூழலில் தனியாக இருந்து உள்ளார்.

அப்போது, தன்னுடைய மகளை, தந்தையான முருகேசன் பயமுறுத்தி மிரட்டியே பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.

அத்துடன், “இந்த பாலியல் பலாத்காரம் சம்பவம் குறித்து வெளியே யாரிடமும் எதுவும் சொல்லக் கூடாது என்றும், அப்படி சொன்னால், உன்னை கொலை செய்துவிடுவேன்” என்றும், அவர் தன் மகளை கடுமையாக மிரட்டியிருக்கிறார். 

இதனால், பயந்து போன அந்த 13 வயது மகள், தனக்கு நேர்ந்த இந்த பாலியல் கொடூரத்தை யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்து உள்ளார்.

மேலும், சிறுமியின் பயத்தைப் பயன்படுத்திக்கொண்ட அந்த காம தந்தை முருகேசன், அந்த சிறுமியை மிரட்டியே தொடர்ச்சியாகப் பல முறை பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கிறார். இப்படியாக, தனது மகளை முருகேசன், கடந்த ஒரு ஆண்டு காலமாக பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கிறார்.

இதன் காரணமாக, அந்த 13 வயது சிறுமியின் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. அத்துடன், சிறுமியின் உடலில் ஏற்படும் மாற்றத்தைக் கண்டு சற்று சந்தேகம் அடைந்த தாய் சுந்தரி, தன் மகளிடம் விசாரித்து உள்ளார். 

அப்போது, தனக்கு தந்தையால் தொடர்ச்சியாக நடக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து, மகள் கூறி கதறி அழுதுள்ளார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த முருகேசனின் இரு மனைவிகளும், இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் சுந்தரி, அங்குள்ள பெருந்துரை போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த போலீசார், முருகேசனை அதிரடியாகக் கைது செய்தனர்.

இதனையடுத்து, முருகேசனிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், அவரிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற்று, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தந்தையே, தன் 13 வயது மகளை தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், பெருந்துறையில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.