மனைவியின் கள்ளக் காதலனை, கணவனே கொடூரமாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கரூர் மாவட்டத்தில் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது. 

கரூர் மாவட்டம் குளித்தலை லாலாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கதிர்வேல், தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். 

இப்படியாக கதிர்வேல் தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாசித்து வந்த நிலையில், இவருக்கும் அங்குள்ள மகாதானபுரம் சேர்ந்த தர்மதுரை என்பவரின் மனைவிக்கும் இடையே அறிமுகம் ஏற்பட்டு, நல்ல பழக்கமாக மாறி உள்ளது.

இந்த பழக்கம், நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக் காதலாக மாறி உள்ளது. இதனால், அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

இப்படியே, அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்த விவகாரம், ஒரு கட்டத்தில் கணவன் தர்மதுரைக்கு தெரிய வந்தது. இதனால், கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு, அது பெரும் பிரச்சனையாக வெடித்து உள்ளது. 

அதன் பின்னர், மனைவியை தொடர்ந்து, மனைவியின் கள்ளக் காதலன் கதிர்வேலையும், தர்மதுரை கடுமையாக எச்சரித்து உள்ளார். 

ஆனாலும், இவர்களின் கள்ளக் காதல் முடியால் தொடர்ந்து நீடித்துக்கொண்டே இருந்து உள்ளது. 

இந்த நிலையில், இந்த பிரச்சனைக்கு முடிவு கட்ட வேண்டும் என்று யோசித்த பாதிக்கப்பட்ட கணவன் தர்மதுரை, தனது நண்பன் கிருஷ்ணனை அழைத்துக்கொண்டு, கதிர்வேல் வீட்டிற்குச் சென்று, தனியாகப் பேச வேண்டும் என்று கூறி அவரை தனியாக அழைத்துச் சென்று பேச்சு வார்த்தை நடத்தி உள்ளனர்.

இதனையடுத்து, அங்குள்ள பிள்ளபாளையும் வாய்க்கால் பகுதிக்கு அவரை அழைத்துச் சென்று பேச்சு வார்த்தை நடத்துவது போல், இருவரும் சேர்ந்து அவரை சரமாரியாக வெட்டி உள்ளனர்.

இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த கதிர்வேல், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

அதன் தொடர்ச்சியாக, அவரது உடல் உறுப்புகளை அங்குள்ள வாய்க்காலில் வீசி விட்டு அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று உள்ளனர்.

இதனையடுத்து, அந்த வழியாகச் சென்றவர்கள், மனிதனின் உடல் உறுப்பு பாகங்கள் வீசப்பட்டு இருப்பது குறித்து, காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்து உள்ளனர்.

இது குறித்து விரைந்து வந்த போலீசார், அந்த உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், உயிரிழந்தது கதிர்வேல் 

என்பது தெரிய வந்தது. இதனையடுத்து, கதிர்வேலின் கள்ளக் காதல் கதைகள் போலீசாருக்கு தெரிய வந்த நிலையில், தர்மதுரை மற்றும் அவரது கூட்டாளியான கிருஷ்ணன் ஆகியோரையும் கைது செய்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.