கடந்த 2016ல் கேரளாவில் பறவை காய்ச்சல் பரவியதை தடுத்து, கோட்டயம், ஆலப்புழா மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதால், பறவைக் காய்ச்சலை மாநில பேரிடராக கேரள அரசு அறிவித்ததுள்ளது. இந்த பறவை காய்ச்சல் இன்புளூயன்ஸா-ஏ வகை வைரஸால் ஏற்படுகிறது. பல வகைகள் இருக்கும் இந்த வைரஸில் எச்5-என்8 வைரஸ் 2 மாவட்டங்களிலும் கண்டயறிப்பட்டு இருக்கிறது. பறவை காய்ச்சலால் இதுவரை 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாத்துகள் இறந்துள்ளன. இந்த வைரஸ் பறவைகள் தாண்டி மற்ற உயிர்களுக்கு பரவ வாய்ப்புள்ளது. 


வளர்ப்பு பறவைகளான கோழிகள், வான்கோழிகள், வாத்துகள் உள்ளிட்டவற்றின் கழிவுகள், மூக்கு, வாய், கண் இவற்றின் வழியாக எச்.5என்8 வைரஸ் பரவுவதாக கண்டறியப்பட்டு உள்ளது.

கேராளாவில் பரவி வரும் பறவைக் காய்ச்சல் காரணமாக அங்கிருந்து கோழி, வாத்து, கோழி தீவனம், முட்டை, உரங்கள் போன்றவை தமிழகத்திற்குள் கொண்டு வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனரகத்துக்கு கோழிப்பண்ணைகளை தொடர்ந்து கண்காணிக்கும்படி  சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது.