தமிழ் திரையுலகில் அனைவரும் விரும்பும் நாயகனாக திகழ்பவர் நடிகர் ஆர்யா. ஆர்யாவை பார்த்து இன்ஸ்பையர் ஆகி ஒர்க்அவுட் செய்வது, சைக்கிளிங் செல்வோர்கள் பலர். இந்நிலையில் தனது நண்பர்களுடன் மெரினா கடற்கரையில் ரன்னிங் சென்றுள்ளார் ஆர்யா. இதை வீடியோ பதிவாக சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். ஆர்யாவுடன் நடிகர் கலையரசனும் இருக்கிறார். 

கொட்டும் மழையையும் பொருட் படுத்தாமல் உடற்பயிற்சியில் ஈடுபட்ட ஆர்யா மற்றும் கலையரசனை பாராட்டி வருகின்றனர் நெட்டிசன்கள். பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வந்த திரைப்படம் சார்பட்டா பரம்பரை. நடிகர் கலையரசன் இந்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார். வடசென்னையில் இருக்கும் பாக்ஸர்களை மையப்படுத்திய இந்தக் கதையில் நடிப்பதற்காக ஆர்யா தனது உடலமைப்பை முழுமையாக மாற்றினார். 

இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பிரத்தியேக புகைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர். 

படத்தில் பசுபதி, சந்தோஷ், ஜான் விஜய், சஞ்சனா நடராஜன், துஷாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஜி.முரளி, எடிட்டராக ஆர்.கே.செல்வா, கலை இயக்குனராக டி.ராமலிங்கம், சண்டை இயக்குனராக அன்பறிவு ஆகியோர் தொழில்நுட்பக் கலைஞர்களாகப் பணிபுரிந்துள்ளனர். கே 9 ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

சுந்தர்.சி இயக்கத்தில் பொள்ளாச்சியில் நடைபெற்று வந்த அரண்மனை 3 படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு எனிமி படத்தில் நடித்து வருகிறார் ஆர்யா. சமீபத்தில் ஷூட்டிங்கின் போது அவருக்கு காயம் ஏற்பட்டு சரியானது குறிப்பிடத்தக்கது.