12 ஆம் வகுப்பு மாணவியிடம் திருமண ஆசை காட்டி, மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த காதலனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். 

சென்னை ஆவடியில் இருக்கும் தனியார் பள்ளியில் 17 வயது மாணவி ஒருவர் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். 

தற்போது, கொரோனா தொற்று மத்தியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளதால், அந்த வகுப்பைச் சேர்ந்த மாணவ - மாணவிகள் மட்டும் பள்ளிகளுக்குச் சென்று வருகின்றனர்.

அப்படியாக, அந்த மாணவி சமீப காலமாகப் பள்ளிக்குச் சென்று வந்தார். முக்கியமாக, கடந்த 21 ஆம் தேதி பள்ளிக்குச் சென்றுவிட்டு, மாலை வீடு திரும்பிய மாணவி, பள்ளி பாடம் விசயமாகத் தோழியின் வீட்டிற்குச் சென்றுவிட்டு வருவதாகச் சென்ற மாணவி, இரவு வந்தும் அந்த மாணவி அதன் பிறகு வீடு திரும்பவே இல்லை. 

இதனையடுத்து, மாணவியைத் தேடி அலைந்த அவரது பெற்றோர், சிறுமியின் தோழிகள் வீட்டிலும் விசாரித்துப் பார்த்து உள்ளனர். ஆனால், எங்குத் தேடியும் சிறுமி கிடைக்காத நிலையில், அவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், தீவிரமாக விசாரணை நடத்தினர். போலீசார் மாணவியைத் தேடி வந்தனர். 

அதே நேரத்தில், மாயமான மாணவியை கண்டுபிடித்துத் தருமாறு அவரது பாட்டி, உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “மாணவியை கண்டுபிடித்துத் தர வேண்டும்” என்று, காவல் துறைக்கு உத்தரவிட்டார்.

இதனையடுத்து, காவல் துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில், சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர், அந்த மாணவிக்கு திருமண ஆசைகாட்டி, காதலில் விழ வைத்து, கடத்திச் சென்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

அதன் தொடர்ச்சியாக, அந்த இளைஞரின் செல்போன் டவரை வைத்துக் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்ற போலீசார், அங்குத் தலைமறைவாக இருந்த இருவரையும் காவல் துறையினர் கண்டுபிடித்தனர். 

இதனையடுத்து, அவர்கள் இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். 

இந்த விசாரணையில், “சம்மந்தப்பட்ட அந்த தனியார் நிறுவன ஊழியர், அந்த 17 வயது மாணவிக்கு திருமண ஆசை காட்டி கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்தது” தெரிய வந்தது. 

இதனையடுத்து, வழக்கை போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்த காவல் துறையினர், அந்த இளைஞரை கைது செய்தனர்.

மேலும், மீட்கப்பட்ட மாணவியை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல் துறையினர், அதன் தொடர்ச்சியாக, திருவள்ளூரில் உள்ள மகளிர் காப்பகத்தில் சேர்த்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.