ஜி.எஸ்.டி குறித்து மூன்று முக்கிய கேள்விகளை திமுகவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, மத்திய அரசிடம் கேள்விகளாக எழுப்பியுள்ளார். அதற்கு மத்திய அரசு தரப்பில் இருந்து விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அவை,


1) கடந்த இரண்டு நிதியாண்டில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீட்டு நிதி வழங்கல் மூலம் வருவாய் வசூல் அதிகரிப்பு ஏற்பட்ட மாநிலங்கள் எண்ணிக்கை ?


2)கடந்த இரண்டு நிதி ஆண்டுகள் வாரியாக, ஜிஎஸ்டி மூலம் வரு

வாய் வசூலில் சரிவை சந்தித்த மாநிலங்களின் எண்ணிக்கை?
3)  2018-19 மற்றும் 2019-20ம் ஆண்டுகளில் ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியிலிருந்து தமிழக மாநிலத்திற்கு வழங்கப்பட்ட நிதியின் விவரங்கள்?

 


இந்த கேள்விகளுக்கு மத்திய அரசு தரப்பிலிருந்து, 2017 ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ், மாநிலங்கள் வாரியாக கொடுக்கப்பட்ட நிதியின் விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாநிலங்களிலும் 14% ஒருங்கிணைந்த வருவாய் விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பதில் கூறப்பட்டுள்ளது. 


இதை பற்றி நம்மிடம் பேசுகிறார் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா..

shiva.jpg


ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதி வழங்கலால், வருவாயில் வசூல் அதிகரிப்பு ஏற்பட்ட மாநிலங்களின் எத்தனை என்று நீங்கள் கேட்ட கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லப்படவில்லையே? 


2018- 2019 மற்றும் 2019-2020 எல்லா நிதியை சரியா கொடுத்துவிட்டதாக சொல்லுகிறார்கள். ஆனா 2020-2021 கொடுக்கவே இல்லை. அதற்கு காரணமாக கொரோனா நோய் தொற்று காலத்தை காரணம் காட்டுகிறார்கள்.  இவர்கள் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்திய போதே , உற்பத்தி செய்யும் மாநிலங்களுக்கான வருவாய் இழப்பீடுக்கு என்ன திட்டம் வைத்துள்ளீர்கள் என்று இழப்பீடு குறித்த கேள்வி பெரிய சர்ச்சையாக எழுந்தது. அப்போதுதான் மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு நிதி 2017 என்ற ஒரு சட்டத்தை அறிமுகப்படுத்தினார்கள். இந்த இழப்பீடு நிதி முதல் 5 வருடங்களுக்கு மட்டும் கொடுக்கப்படும் என்று மத்திய அரசு தெளிவாக சொல்லிவிட்டது. 2022ம் ஆண்டு வரை கொடுப்பார்கள். இந்த கொரோனா காலத்தில் எந்த மாநிலங்களிலும் வருவாய் பெரிதாக இல்லை.  


இதுவரை தமிழகத்துக்கு இரண்டு தவணையாக 12 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்துள்ளார்கள். அதிகமாகமான நிதியை கர்நாடக மாநிலத்துக்கு கொடுத்துள்ளார்கள். இதெல்லாம் என்ன அடிப்படையில் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஜிஎஸ்டிக்கு பிறகு ,வரி வசூல் செய்வதில் மாநிலங்களை விட மத்திய அரசுக்கு தான் முக்கிய உரிமைகள் எல்லாம் சென்று விட்டது. இப்போது இழப்பீடு நிதியும் வரவில்லை, நிறுத்திவைத்து இருக்கிறார்கள். நிதி நீட்டிக்கப்படுமா என்ற கேள்விக்கும் சரியான பதில் எதுவும் அவர்கள் சொல்லவில்லை.


எந்த மாநிலங்கள் வருவாய் இழப்பீடை சந்தித்துள்ளது என்று கேட்டு உள்ளீர்கள். அதற்கு எந்த மாநிலங்களும் இழப்பீட்டை சந்திக்கவில்லை என்றுதானே விளக்கம் கொடுத்து இருக்கிறார்கள்..?

இழப்பீடு இல்லை என்றால், சில மாநிலங்களுக்கு ஏன் கூடுதல் நிதி கொடுத்து இருக்கிறார்கள்? இழப்பீடு நிதி என்ற முறை இல்லையென்றால், சந்தைக்கடன் என்ற ஒன்றை வசூலித்து கொடுக்க வேண்டும். அதை ஏன் கொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்ப இருந்தோம் ஆனால் இன்று அவை நடைபெறவில்லை. அடுத்த முறை பாராளுமன்ற அவை கூடும்போது நிச்சயம் விளக்கம் கேட்போம். 


ஜிஎஸ்டி நிலுவை தொகை 19 ஆயிரம் லட்சம் ரூபாய், மத்திய அரசு தமிழகத்துக்கு கொடுக்க வேண்டியுள்ளது. மாநிலங்களுக்கு கொடுக்கவேண்டிய நிலுவை தொகைக்கு என்று  இந்த பட்ஜெட்டில் எதுவும் குறிப்பிடப்படவில்லையே?


பட்ஜெட்ல இதை பற்றி குறிப்பிட தேவையில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்விகள் கேட்டுத்தான் பதில் பெறமுடியும். இருப்பினும் பட்ஜெட்டில் நிலுவை தொகையை கொடுத்துவிட்டுவோம் என்று சொல்லியிருக்கலாம்தான்.. ஆனால் அவர்கள் சொல்லவில்லை. இப்போது நான் கேட்ட கேள்விக்கு கூட, கொடுத்துவிட்டோம் என்று தான் சொல்லியுள்ளார்கள். ஆனால் 2020- 2021ம் ஆண்டிற்கு நிலுவைத்தொகை கொடுக்கவேயில்லை என்பதுதான் உண்மை. 


இந்த பட்ஜெட்ல 2.9 லட்சம் கோடி மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டு என்று குறிப்பிட்டுள்ளார்கள். இதில் ஜிஎஸ்டி நிலுவை தொகையை கொடுப்பார்களா அல்லது நிவாரண நிதியை கொடுப்பார்களா?

அதை அவர்களை தான் கேட்க வேண்டும். எதன் அடிப்படையில் கொடுக்க போகிறார்கள் என்று அவர்கள் சரியாக சொல்லவில்லை. 


பட்ஜெட் 2021 குறித்த உங்களது பார்வை?


ஏமாற்றம் தரக்கூடியது பட்ஜெட். லட்சகணக்கான ரூபாயில் திட்டம் போடுகிறார்கள் அதற்கு வருவாய் எங்கியிருந்து வரும்? வேலைவாய்ப்புக்கு எந்த வழியும் சொல்லவில்லையே? லாபத்தில் இயங்கக் கூடிய பொதுத்துறை நிறுவத்தை எல்லாம் எதற்கு விற்கிறார்கள்.. 

stalin

தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரையை திமுக புறக்கணித்து வெளிநடப்பு செய்து இருக்கிறார்கள். ஒரு எதிர்கட்சியாக சட்டமன்றத்தில் ஒரு விவாதத்தை ஏற்படுத்தினால்தானே மக்கள் பிரச்சனைக்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும். ஆனால் ஸ்டாலின் தொடர்ந்து சட்டமன்றத்தை விட்டு வெளிநடப்பு செய்கிறாரே ?


அவர்கள் பேச வாய்ப்புதான் கொடுக்கவில்லையே? பேச வாய்ப்பு கொடுத்தானே பேசி தீர்வு காண முடியும்? 


அப்போ விவாதத்துக்கான முயற்சியை தானே தொடர்ந்து எடுக்க வேண்டும்.. ஆனால் தொடர்ந்து வெளிநடப்பு செய்கிறார் என்ற பிம்பம் ஏற்பட்டுள்ளதே?

அப்படி இல்லை. எல்லாம் முறையும் புறக்கணிப்பு செய்துவிடவில்லை. ஸ்டாலின் மற்றும் மற்ற திமுக உறுப்பினர்கள் மக்கள் பிரச்சனையை குறித்து முதல்வருடன் விவாதம் செய்து இருக்கிறார்கள்.