வீடு புகுந்து கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண், கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு நிர்வாண நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கர்நாடகம் மாநிலத்தில் தான், இப்படி ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கர்நாடகம் மாநிலம் மண்டியா மாவட்டம் மத்தூர் டவுன் வி.வி. நகரைச் சேர்ந்த 39 வயதான பெண் ஒருவர், தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் அங்குள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். 

மிகவும் மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த அந்த பெண்ணின் வாழ்க்கை, நினைத்துக்கூடப் பார்க்க முடையாத அளவில் ஒரே நாளில், சில நிமிடங்களில் முடிவுக்கு வந்துள்ளது.

அதாவது, நேற்று காலையில் அந்த 39 வயது பெண்ணின் கணவர் வேலைக்கு சென்று உள்ளார். அப்பொழுது, அந்த பெண்ணின் பிள்ளைகளும் பக்கத்து ஊரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று உள்ளனர். இதனால், அந்த 39 வயது பெண் மட்டும் தனது வீட்டில் தனியாக இருந்து உள்ளார்.  

இப்படிப்பட்ட சூழ்நிலையில், நேற்று மாலை 4 மணிக்கு மேல் அந்த பெண்ணின் வீட்டிற்குள் மர்ம நபர் ஒருவர் அதிரடியாகப் புகுந்து உள்ளார். அப்போது, அந்த பெண் மட்டும் வீட்டில் தனியாக இருப்பதைப் பார்த்து, அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கி விட்டு, அந்த பெண்ணின் கை மற்றும் கால்களை அங்கேயே கட்டிப் போட்டு உள்ளார். 

அதன் தொடர்ச்சியாக அந்த பெண்ணின் வீட்டில் இருந்த டிவி யை ஆன் செய்து, மிக அதிக அளவில் சத்தத்தையும் வைத்து உள்ளார். அதன் பிறகே, அந்த கொடூரத்தை அவர் அரங்கேற்றி இருக்கிறார்.

டிவியில் அதிகப்படியான சத்தத்தை வைத்த பிறகு, அந்த பெண்ணை மிக கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். 

அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து முடித்த பிறகு, இந்த பெண்ணை இப்படியே விட்டால் தன் உயிருக்கு ஆபத்து என்று கருதிய அந்த நபர், அந்த பெண்ணை கழுத்தை நெரித்து மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.

இந்த நிலையில், மிக நீண்ட நேரமாக அந்த பெண்ணின் வீட்டில் இருந்து அதிக அளவில் சத்தத்துடன் டி.வி. ஓடிக்கொண்டிருந்ததால், எரிச்சல் அடைந்த அக்கம் பக்கத்தினர், அந்த வீட்டிற்குள் வந்து பார்த்து உள்ளனர். அப்போது, அந்த பெண் நிர்வாண நிலையில் சடலமாக உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது.

அதனைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால், பயந்துபோன அவர்கள், உடனடியாக இது குறித்து அங்குள்ள மத்தூர் டவுன் போலீசாருக்கு தகவல் கூறியுள்ளனர். 

இது தொடர்பாக விரைந்து வந்த மத்தூர் டவுன் போலீசார், அந்த பெண்ணின் வீட்டிற்குள் வந்து பார்த்து உள்ளனர். அப்போது, அந்த பெண் நிர்வாண நிலையில் மீட்கப்பட்டார். அந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

அத்துடன், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த நர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 

மேலும், இந்த சம்பவம் குறித்து அப்பகுதியைச் சேர்ந்த அக்கம் பக்கத்தினரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டு உள்ளது.