1999-ல் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட சீரியல்களில் மிகவும் பிரபலமான ஒரு தொடர் சித்தி.கண்ணின் மணி என்ற டைட்டில் பாடலில் தொடங்கி 90'ஸின் மிகப்பெரிய ஹிட் தொடராக இந்த தொடர் இருந்தது.இந்த தொடரின் இரண்டாம் பாகம் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த தொடரிலும் ராதிகா ஹீரோயினாக நடிக்கிறார்.சித்தி 2 தொடரின் ஒளிபரப்பு ஜனவரி 27ஆம் தேதி முதல் தொடங்கியது.கொரோனா காரணமாக இந்த தொடுரின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது,இதனை தொடர்ந்து இந்த தொடரில் நடித்து வந்த பொன்வண்ணன்,நிகிலா,ஷில்பா உள்ளிட்ட சில முக்கிய கேரக்டேர்கள் சில காரணங்களால் மாற்றப்பட்டனர்.

ப்ரீத்தி ஷர்மா,நந்தன் லோகநாதன்,மீரா கிருஷ்ணன்,மஹாலக்ஷ்மி இந்த தொடரின் முன்னணி கதாபாத்திரங்களாக நடித்து வருகின்றனர்.பொன்வண்ணன் கேரக்டரில் நிழல்கள் ரவி நடிக்கிறார்,நிகிலா ராவ் நடித்து  கதாபாத்திரத்தில் காயத்ரி யுவராஜ் நடிக்கிறார்,ஷில்பா நடித்து வந்த கதாபாத்திரத்தில் ஜெயலட்சுமி நடிக்கிறார்.

இந்த தொடர் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.இந்த தொடர் நிறைவடைய போவதாக சமூகவலைத்தளங்களில் தகவல்கள் பரவி வந்தன.இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நேஹா இந்த தொடர் நிறைவடைவதாக வெளியான தகவல்கள் உண்மையல்ல என்ற தகவலை தெரிவித்தார்.இதனை தொடர்ந்து ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

 

radhika chithi 2 neha menon denies rumours on serial being stopped