ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி முதல் ஆகஸ்டு 8ம் தேதி வரை நடக்கவுள்ளது. இந்த போட்டியில் தமிழகத்தை சேர்ந்த துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை பங்குபெற உள்ளார்.


2021க்கான ஒலிம்பிக் போட்டியில், 15 பேர் கொண்ட இந்திய துப்பாக்கி சுடுதல் அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த துப்பாக்கிச் சுடுதலில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் உலகின் நம்பர் ஒன் வீரங்கனையான, தமிழகத்தில் கடலூரைச்  சேர்ந்த இளவேனில் வாலறிவன் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.  


ஒலிம்பிக் தேர்வு போட்டிகளில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளியிப்படுத்தி வந்ததால், தனி மற்றும் கலப்பு பிரிவில் இளவேனிலுக்கு இந்திய அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த இளம் வீராங்கனை ஒ