14 வது ஐபிஎல் தொடர் வரும் 9 ஆம் தேதி தொடங்குகிறது.சென்னையில் மும்பைக்கும், பெங்களூருக்கும் இடையேயான முதல் போட்டி நடைபெறுகிறது. அதன் பின்பு சென்னையில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் 3 வது போட்டி நடக்கிறது.அதில் ஹைதராபாத் அணியும், கொல்கத்தா அணியும் மோதுகின்றன. இந்தநிலையில் போட்டியில் கலந்துக்கொள்வதற்காக 4 அணிகளும் சென்னை வந்தடைந்தன.

கொரோனா பரவல் காரணமாக  4 அணி வீரர்களும்  சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்தநிலையில் சென்னை வந்தடைந்த பின் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்டு உதவி கேட்டுள்ளார்.அது தற்பொழுது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

davidwarner

ஐபிஎல் தொடர் ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்கி மே 20 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.கிட்டதட்ட 40 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் பலநாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்தநிலையில் கொரோனா பரவல் காரணமாக பலவீரர்கள் பங்கேற்கவும் இல்லை.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் நேற்றையை தினம் சென்னை வந்தடைந்தார்.ஹோட்டலில் தனி அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வார்னர், 7 நாட்களை எப்படி கடப்பது, அதனால் மன அழுத்தம் வந்துவிடக்கூடாது என்பதற்காக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்  “தான் நேற்று மதியம் சென்னை வந்தடைந்ததாகவும், நீண்ட நேரம் உறங்கியதாகவும் சொன்னர். பின்பு 7 நாட்கள் தனிமையில் இருக்கவேண்டும் என்றும், இந்தக் காலக்கட்டத்தில் எந்தவிதமான மன அழுத்தத்தையும் உணராமல் இருக்க, ரசிகர்களாகிய நீங்கள் எனக்கு, எனக்க செய்யலாம் என்ற யோசனையை கூறுங்கள் என்று சொன்னார்.அது என்னவாக இருந்தாலும் சரி வேடிக்கையானதாக இருக்கலாம், நிகழ்ச்சிகள் , படங்கள் எதுவானலும் சரி தன்னுடைய கமெண்ட்டில் வந்து எனக்கு யோசனை கூறுங்கள் என்று ரசிகர்களிடம் கேட்டுள்ளார். இந்த உதவியை நீங்கள் செய்யுங்கள், அதற்கு நன்றி என்று பதிவிட்டும் இருந்தார்.


இந்தநிலையில் அவரது வீடியோவிற்கு கீழ் எக்கச்சக்கமான ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.இந்திய கிரிக்கெட் வீரரும், மும்பை அணியின் கேப்டனுமான ரோகித் சர்மா கமெண்ட் செய்துள்ளார். டிக் டாக்கை மிஸ் செய்வதாக கமெண்ட் செய்துள்ளார்.ரோகித் மட்டுமல்லாமல் டேவிட் வார்னர் வீடியோவிற்கு கீழே வந்த அதிகப்படியான கமெண்ட்டுகளில் டிக் டாக்கை தான் பரிந்துரை செய்தனர்.அதற்கான காரணம் கடந்த 2020 ஐபிஎல் தொடரின் போது டிக் டாக்கில் படு ஆக்டிவாக இருந்த வார்னரின் புட்டபொம்மா நடனம் அதிகமாக வைரலாகி சமூக வலைதளங்களில் பரவியது. எந்த அளவிற்கு என்றால் ஆஸ்திரேலியா இந்தியா இடையே நடந்த கிரிக்கெட் போட்டிகளின் போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் டேவி வார்னரை புட்டபொம்மா நடனம் ஆட சொல்லி கேட்கும் அளவிற்க்கு வைரலானது.இதன் காரணமாகவே அதிகமானோர் அவருக்கு டிக் டாக்கை பரிந்துரை செய்துள்ளனர்.

rohith comment

டேவிட் வார்னர் ஐபிஎல் தொடரை பொறுத்தவரை கேப்டனாக மட்டுமல்லாமல் , அதிக ரன் குவித்த வெள்நாட்டு வீரராகவும் திகழ்ந்து வருகிறார். அதுமட்டுமில்லாது பேட்டிங்கிலும் ஆதிக்கம் செலுத்தும் வார்னர், கடந்த 6 சீசன்களாக தொடர்ந்து 500 க்கும் மேற்பட்ட ரன்களை அடித்த ஒரே வீரர் என்ற பெருமையையும் வைத்துள்ளார்.ஹைதராபாத் அணி ஏபரல் 11 ஆம் தேதி மாலை 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது.