விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் புகழ். புகழ் இல்லை என்றால் நிகழ்ச்சியே இல்லை என்றளவுக்கு அவரின் பங்களிப்பு இருக்கும். தொடர்ந்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார் புகழ். வலிமை, அருண் விஜய் - ஹரி இணையும் படம் என தொடர்ந்து படங்களில் பிஸியாகி பணிபுரிந்து வருகிறார். 

சமீபத்தில் தான் கார் வாங்கியிருப்பது குறித்த வீடியோ ஒன்றை தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார் புகழ். அதில், தான் எப்படி கார் கழுவி சம்பாதித்துக் கஷ்டப்பட்டு இந்த அளவுக்கு உயர்ந்து கார் வாங்கியுள்ளேன் என்பது குறித்து நெகிழ்ச்சியுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

தற்போது, சபாபதி எனும் படத்தில் சந்தானத்துடன் நடித்து வருகிறார் புகழ். அதன் படப்பிடிப்பில் தனது புதிய காரை சந்தானத்திடம் காட்டியிருந்தார். அந்தக் காரை ஓட்டிப் பார்த்து, புகழுக்குப் பாராட்டு தெரிவித்திருந்தார் சந்தானம். 

கடந்த வாரம் நடந்த வைல்டு கார்டு சுற்றில் மதுரை முத்து, பவித்ரா, தர்ஷா குப்தா, தீபா, ஷகிலா மற்றும் ரித்திகா பங்கு பெற்றுள்ளனர். இந்நிலையில் இந்த கடினமான போட்டியில் வென்று யார் அந்த பிரமாண்ட பைனல்ஸ் சுற்றுக்கு செல்வார்கள் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்திருக்கின்றனர். ஏற்கனவே அஸ்வின், கனி மற்றும் பாபா பாஸ்கர் மூவரும் கடைசி சுற்றுக்கு நேரடியாக தேர்வாகியிருந்தனர். 

இந்நிலையில் நடிகை ஷகிலா மற்றும் பவித்ரா இருவரும் வைல்டு கார்டு போட்டியில் வென்றனர். இந்த வாரம் குக் வித் கோமாளி இரண்டாம் சீசனின் பைனல்ஸ் நடைபெற இருக்கிறது. இந்த பைனலில் யார் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இருந்தாலும், இந்த நிகழ்ச்சி முடிவடையப் போகிறது என்கிற ஏக்கம் தான் பலரது முகத்திலும் பார்க்கமுடிகிறது. 

இந்நிலையில் குக் வித் கோமாளியின் ரசிகர்களின் ஃபேவரைட்டான புகழ் தற்பொழுது ஒரு பதிவிட்டுள்ளார். அவர் கூறும் பொழுது மிஸ் யூ மக்களே. எனது வித் கோமாளி டீம்.  ரொம்ப கஷ்டமா இருக்கு. அழுகையா வருகிறது என்று வேதனையுடன் இந்த பதிவை அவர் வெளியிட்டுள்ளார்.

pugazh gets emotional about the end of cook with comali season 2