இந்தியா, இங்கிலாந்து இடையே நடைபெற்ற டெஸ்ட், ஒரு நாள் மற்றும் T20 போட்டிகளிலும் இந்தியா வெற்றியை கைப்பற்றியது. கடப்பாரை பேட்டிங், பலம் வாய்ந்த உலகத்தர பெளலர்கள் என்று சொல்லும் அளவிற்கு தங்கள் அணியை வலுவாக வைத்திருந்த இங்கிலாந்தை , இந்திய மண்ணில் வாஷ் அவுட் செய்து அனுப்பியது இந்தியா .

தொடக்கத்தில் மிகவும் வலுவான அணியாகவே தெரிந்த இங்கிலாந்து, இந்தியாவின் இளம் வீரர்களிடம் தங்களை நிரூபிக்க போராடியது. அந்த வகையில் இந்தியாவில் பல இளம் வீரர்களை இங்கிலாந்து வீரர்கள் களத்திலேயே பாராட்டினர், பின்னர் சமூக வலைதளங்களில் பாராட்டினர். இந்திய வீரர்கள் அக்சர் பட்டேல், க்ருனால் பண்ட்யா, பிரசித் கிருஷ்ணா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் என  இங்கிலாந்திற்கு எதிரான தங்களது முதல் சர்வதேச போட்டியில் , உலக கிரிக்கெட் அணிகள் மொத்தமும் திரும்பி பார்க்கும் வண்ணம் முத்திரையை பதித்தனர்..

இந்திய அளவில் பாராட்டுக்களை பெற்றதுமட்டுமின்றி, அடுத்து இவர்கள் எப்போது களமிறங்குவார்கள் என்ற அளவிற்கு கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை விதைத்தனர். இந்தநிலையில் 14 வது ஐபிஎல் தொடர் வருகின்ற 9 ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. மும்பை மற்றும் பெங்களூர் அணிகள் சென்னையில் மோதுகின்றன. சில அணிகளின் கேப்டன்கள் தவிர்க்கமுடியாத காரணங்களால் மாற்றப்பட்டுள்ளனர். அதில் இங்கிலாந்திற்கு இடையேயானா முதல் ஒரு நாள் போட்டியின் போது ஸ்ரேயஸ் ஐயருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்தடுத்த போட்டிகளில் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை. இந்தநிலையில் இன்னும் காயம் முழுமையமாக குணமடையாததால், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனை மாற்றியுள்ளனர்.

  இங்கிலாந்து மட்டுமின்றி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியிலும் தொடர்ந்து தன் வலிமையான ஆட்டத்தையும், அதே நேரத்தில் வெற்றியைக் கைப்பற்ற இலக்கை அடையும் வரை நிதானமான ஆட்டத்தையும் வெளிக்காட்டி தன் வளர்ச்சியை உலகத்தர பந்துவீச்சாளர்கள், மற்றும் பேட்ஸ்மேன்கள் பாராட்டும் அளவிற்கு வந்தவர் தான் ரிஷப் பண்ட். 
23 வயதுதான் ஆனாலும் தொடர்ந்து அவர்மேல் பல விமர்சனங்கள் வைக்கப்பட்டன. விக்கெட் கீப்பராக இந்திய அணிக்கு விளையாட தொடங்கிய நாள் முதல் இந்திய லெஜண்ட்ஸ்களோடு ஒப்பிட்டு அவரை விமர்சனம் செய்தனர்.ஆனாலும் இந்தியாவின் வெற்றியில் தன் பங்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்வரை அவர் தொடர்ந்து விளையாடினார்.பின்பு இந்தியாவின் வெற்றியில் ரிஷப் பண்டின் பெயர் தான் முதலிடத்தில் இருக்கும் அளவிற்கு உயர்ந்தார். இதனை அடிபப்டியாகக் கொண்டு  ரிஷப் பண்டை 14 வது ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியின் கேப்டனாக நிர்வாகம் தேர்வு செய்தது. கேப்டன் ரிஷப் பண்டிற்கு கிரிக்கெட் ஜாம்பவான்கள், ரசிகர்கள் , கிரிக்கெட் வல்லுனர்கள், வர்ணனையாளர்கள் என  பலதரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்தன.

2021 ஐபிஎல் தொடரை பொறுத்தவரை மிகவும் இளம்வயதில் கேப்டனாக பொறுபேற்றுள்ளார் ரிஷப் பண்ட்.இந்தநிலையில் இங்கிலாந்து வீரரான சாம் பில்லிங்ஸ், ரிஷப் பண்ட் உடனான தன் அனுபவத்தை  பகிர்ந்துக்கொண்டார். அப்போது அவர் கூறியது, நான் முதன் முதலில் ரிஷப் பண்ட்டை பார்த்த போது அவர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார், அப்போது கிறிஸ் மோரிஸ் மற்றும் நாதன் குல்டர்நைல் போன்ற உலகத்தர பந்துவீச்சாளர்களை அடித்து துவம்சம் செய்து கொண்டிருந்தார்.அப்பொழுது நான் ராகுல் ட்ராவிட்டிடம் யார் இந்த பையன் என்று கேட்டேன். அப்போது எனக்கு தெரியவில்லை, ஆனால் தற்போது தான் யார் என்பதை இந்த உலகிற்கு தெரியப்படுத்துவிட்டார் ரிஷப் பண்ட் என்று பெருமையோடு பாராட்டினார்.மேலும் அவரைப் போன்ற ஒரு திறமையான இளம் வீரரை இதுவரை பார்த்ததில்லை என்றும் கூறினார். ரிஷப் பண்டின் பலமான முன்னேற்றம் மகிழ்ச்சி அளிப்பதாகவும், அதற்கு தன் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்வதாகவும் இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்ஸ் கூறினார்.


இந்தியாவின் எதிர்கால வெற்றிகளில் நிச்சயம் ரிஷப் பண்டின் பங்கீடு ஒரு முக்கிய தேவையாக இருக்கும் அளவிற்கு அவரது வளர்ச்சி உள்ளது. இந்திய ஜாம்பவான்கள் மட்டுமின்றி உலகத்தர கிரிக்கெட் ஜாம்பவான்களும் ரிஷப் பண்ட் வளர்ச்சியை பார்த்து வியப்படைந்துள்ளனர்.  இந்தியாவிற்கு ரிஷப் போன்ற இளம் ரத்தங்கள் தான் மீண்டுமொரு சரித்தரத்தை படைப்பதற்கு உந்துகோலாக இருக்கின்றனர்.