நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை கூட்டத்தொடர் இன்று காலை நடைப்பெற்றது. அப்போது பேசிய மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு , ‘’ அவை நடைப்பெறும் போது, எம்.பிக்கள் மொபைல் போனில் அவை நடவடிக்கைகளைப் பதிவு செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்று கூறியுள்ளார்.  


மேலும் அவர், ‘’ மாநிலங்களவை நடைப்பெறும் போது எம்.பிகள் மொபைல் போன் உபயோகிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டினார். சில உறுப்பினர்கள் மொபைல் போன் மூலம் , அவை நடவடிக்கைகளைப் பதிவு செய்வது கவனத்துக்கு வந்துள்ளது. அதிகாரப்பூர்வமற்ற வகையில் அவை நடவடிக்கைகளை பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்வது அவை உரிமையை மீறிய செயல். 


இந்த செயல் நாடாளுமன்ற நடைமுறைகளுக்கு எதிரானது.  மீண்டும் இது போன்ற செயல்களில் உறுப்பினர்கள் ஈடுபடக்கூடாது. மீறி செய்தால் அவையின் கண்டனத்துக்கு உள்ளாக்கூடும் என்றும் வெங்கைய்யா நாயுடு எச்சரித்துள்ளார்.