கடந்த ஜனவரி 26ம் தேதியன்று  மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தியிருந்தனர். அந்த போராட்டம் வன்முறையில் முடிந்ததோடு, குடியரசு தினத்தன்று செங்கோட்டையில் விவசாயிகளின் கொடியும் ஏற்றப்பட்டது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். 


வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்து இருந்த நிலையில், டெல்லியின் சிங்கு மற்றும் டிக்கிரி எல்லையில் போராடி வரும் விவசாயிகளை ஒடுக்க, டெல்லி அரசு முள்வேலியுடன் கூடிய பேரிகார்டுகள், சிமெண்டினால் தடுப்புக்கு முன்னதாக இரும்பு ராடுகளும் உருவாக்கப்பட்டுள்ளது.


இதை கடுமையாக கண்டித்து ட்விட்டரில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார் ராகுல்காந்தி. இதுகுறித்து, ‘’ இந்திய அரசே, பாலங்களை நிறுவுங்கள்.. சுவர்களை அல்ல” என்ற கேப்ஷனுடன் கூடிய புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.