“காதலி யாருக்கு?” என்கிற போட்டியில், சிறுவர்கள் இடையே நடைபெற்ற சண்டையில், சிறுவனை கடத்தி நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

“காதலி யாருக்கு?” என்கிற சிறுவர்கள் இடையே நடைபெற்ற இந்த போட்டி சண்டை புதுச்சேரியில் தான் அரங்கேறி இருக்கிறது.

புதுச்சேரி துப்புராயப்பேட்டை வம்பாகீரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன், அங்குள்ள தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். 

அதே போல், அங்குள்ள சாரம் பகுதியைச் சேர்ந்த 23 வயதான திலீப் குமார், அங்குள்ள ஒரு கல்லூரியில் படித்து வருவதாகக் கூறப்படுகிறது. 

இந்த இருவரும் சேர்ந்து, அந்த பகுதியைச் சேர்ந்த ஒரே பெண்ணை காதலித்து வந்து உள்ளனர். இது தொடர்பாக, அதாவது “காதலி யாருக்கு?” என்கிற இந்த போட்டியால் அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. இப்படியாக, இவர்களது முக்கோண காதல் கதை, ஒரு முடிவே தெரியாமல் கடந்த சில மாதங்களாக சென்றுகொண்டு இருந்தது.

இந்த நிலையில் தான் இளைஞர் திலீப் குமார், அந்த பெண்ணுடன் தான் சேர்த்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தைத் தனது செல்போனில் அந்த சிறுவனிடம் காட்டி, அந்த பெண் என்னைத் தான் காதலிக்கிறது என்றும், உன்னைக் காதலிக்க வில்லை என்றும், அதனால் நீ விலகிக்கொள்” என்றும் அந்த சிறுவனிடம் சீறியிருக்கிறார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த சிறுவன், தான் காதலித்த பெண்ணை பழிவாங்க நினைத்து, கடும் ஆத்திரத்துடன், நேரமாக அந்த பெண்ணின் வீட்டிற்குச் சென்று, வீட்டில் இருந்த அவரது பெற்றோரிடம் “குறிப்பிட்ட அந்த செல்போன் காதல் புகைப் படத்தை காட்டி” அந்த பெண்ணின் காதல் விசயத்தைப் போட்டுக் கொடுத்திருக்கிறார். இதனால், அந்த பெண்ணின் வீட்டில் பெரும் பிரச்சனை வெடித்து உள்ளது.

இதனையடுத்து, அந்த மாணவியை அவரது குடும்பத்தினர் அடித்துத் துன்புறுத்தியதாகத் தெரிகிறது. இந்த விசயம், திலீப் குமாருக்குத் தெரிய வந்த நிலையில், அவர் கடும் அதிர்ச்சியடைந்தார்.

இதனால், கடும் திலீப் குமார் கடும் ஆத்திரமடைந்து குறிப்பிட்ட அந்த சிறுவனையும், அவனது நண்பரையும் தட்டாஞ்சாவடி பாப்ஸ்கோ அலுவலகம் காய்கறி மார்க்கெட் பின்புறத்திற்குக் கடத்திச் சென்று உள்ளனர். 

மேலும், அந்த இடத்தில் வைத்து சம்மந்தப்பட்ட அந்த சிறுவனையும், அவனது நண்பரையும் அடித்து உதைத்து ஆடைகளை உருவி, நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்து உள்ளதாகக் கூறப்படுகிறது. அத்துடன், அவர்களை அந்த காதலன் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட அந்த சிறுவன், தனது பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த அவமானத்தைக் கூறியதால், அதிர்ச்சியடைந்த அவர்கள், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், காதலன் திலீப் குமார், மற்றும் அவனது மற்ற கூட்டாளிகளான கார்த்திகேயன், முகமது ரபிக் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அத்துடன், இது குறித்து வில்லியனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து திலீப்குமாரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.