போலீசார் ஒருவர், தன் மனைவியை கடுமையாகத் தாக்கி கொடூரத்தின் உச்சமாக, ஆசிட் குடிக்கவைத்து இரக்கமின்றி மீண்டும் மீண்டும் கொடுமைப்படுத்திய சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

குஜராத் மாநிலத்தில் தான், இறக்கமற்ற இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

போலீசாருக்கு பொதுவாக இறக்க குணமும், பிறருக்கு உதவி செய்யும் மனப்பாங்கும், பொது மக்கள் மீது அன்பும், பொதுமக்களுக்குத் தான் ஒரு சேவகன் என்கிற மனப்பான்மையும் வேண்டும் என்று, தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்தியாவில் சில காவலர்களுக்கு இந்த குணங்கள் பெரும்பாலும் இருப்பதில்லை. இதனால் தான், சாத்தான்குளம் போன்ற லாக்கப் டெத் மரணங்கள் அரங்கேறுகின்றன. ஆனால், இதில் வேதனை என்ன வென்றால், பொது மக்கள் மீது தான் குறிப்பிட்ட இந்த குணங்கள் சில போலீசாருக்கு இல்லை என்று நினைத்தாலும், இவர்களது வீட்டிற்குள்ளும் குறிப்பிட்ட சில போலீசார் துளியும் இறக்கமற்று, அரக்க குணத்தோடு தான் நடந்துகொள்கிறார் என்று, இது போன்ற சபம்வங்களை பார்க்கும் போது நினைக்கத் தோன்றுகிறது. அதற்கு, குஜராத்தில் நடைபெற்ற இந்த சம்பவமே ஒரு சான்றாக அமைந்திருக்கிறது.

அதாவது, குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த அஷோக் சவுஹான் என்பவர், அந்த பகுதியில் போலீஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகிறார். இவருக்கு, கடந்த 2015 ஆண்டு ஜெயஸ்ரீ என்ற பெண்ணுடன் முறைப்படி திருமணம் நடைபெற்று உள்ளது.

திருமணம் ஆனது முதல் போலீஸ் கான்ஸ்டபிள் அஷோக் சவுஹான் குடும்பத்தினர், ஜெயஸ்ரீயை சின்ன சின்ன விசயங்களுக்குக் கூட தொடர்ந்து குற்றம்சாட்டியும், துன்புறுத்தியும் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

முக்கியமாக, திருமணத்தின் போது அஷோக் சவுஹானிற்கு பெண் வீட்டார் சார்பாக ஒரு இருசக்கர வாகனத்தை தட்சணையாக அளித்திருந்தனர். அந்த இருசக்கர வாகனம் வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்தபோது, குரங்குகள் சில அதன் மீது அமர்ந்து, அதனை முற்றிலுமாக சேதப்படுத்தி இருக்கின்றன.

இதனால், கடும் கோபம் அடைந்த அஷோக் சவுஹான், மனைவியின் பெற்றோர் மிகவும் தரமற்ற இருசக்கர வாகனத்தை தனக்கு வாங்கித் தந்துள்ளனர் என்று கூறி, தன் மனைவியை துன்புறுத்தி அடிக்கத் தொடங்கி உள்ளார். ஆனாலும், கணவனின் கொடுமைகளை வெளியே யாரிடமும் எதுவும் சொல்லாமல் அந்த பெண்மணி அமைதி காத்து வந்துள்ளார்.

இப்படியாக, மனைவியை அந்த போலீஸான அஷோக் சவுஹான், தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

குறிப்பாக, கடந்த வாரம், அந்த மாநிலத்தின் பாரம்பரிய உடையை அணிவது தொடர்பாக அஷோக் சவுஹான் சகோதரிக்கும், அவர் மனைவி ஜெயஸ்ரீக்கும் இடையே ஒரு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனை கேள்விப்பட்ட அஷோக் சவுஹான், தனது சகோதரியிடம் நீ எப்படி சண்டை போடலாம் என்று, கோபப்பட்டு அவரை கடுமையாகத் தாக்கி உள்ளார். 

அத்துடன், தன் மனைவியின் வயிற்றிலேயே அவர் உதை்திருக்கிறார். அப்போது, கொடூரத்தின் உச்சமாக, ஆசிட்டை குடிக்கச் சொல்லி வற்புறுத்தியதுடன், வலுக்கட்டாயமாக மனைவியின் வாயில் ஊற்றி குடிக்க வைத்திருக்கிறார். 

இதில், அவருக்கு வயிற்று எரிச்சல் ஏற்பட்டு, வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டு கத்தி, தன் கணவனிடம். “என்னை மருத்துவமனையில் அனுமதியுங்கள், என்னால் வலியை தாங்க முடியவில்லை” என்று, கெஞ்சி கேட்டிருக்கிறார். ஆனால், அப்போதும் கருணா காட்டாத அந்த போலீஸ், மனைவியின் வயிற்றில் மீண்டும் மீண்டும் உதைத்து கொடூரமாகத் தாக்கி இருக்கிறார். 

அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, அந்த பெண்ணை, கணவன் ஆசிட் குடிக்க வைத்த சம்பவம் வெளியே தெரிய வந்தது. இதனையடுத்து, அந்த பெண்ணை மீட்ட அக்கம் பக்கத்தினர், அந்த பெண்ணை உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த ஷாஹிபாக் காவல் நிலைய போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இது தொடர்பான புகாரைப் பெற்றுக்கொண்டு, வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.