12 வருட கள்ளக் காதல் உறவு சலித்துப் போன நிலையில், காதலியுடன் சண்டைபோட்டு காதலன் பிரிய நினைத்த நிலையில், இருவருக்குள்ளும் சண்டை வந்து கொலையில் முடிந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தொழில் நகரமான மும்பையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. 

மும்பையில் உள்ள வோர்லி பகுதியில் 44 வயதான பெண் ஒருவர், தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். 

அப்போது, அந்த பெண்ணின் வீட்டிற்கு ஆசாரி வேலைகள் செய்வதற்காகக் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இளைஞன் ஒருவன் வந்துள்ளான். அப்போது, அந்த பெண்ணிற்கும், அந்த இளைஞனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த பழக்கம், நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக் காதலாக உருமாறி உள்ளது. இதனால், அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். 

ஒரு கட்டத்தில் அந்த வீட்டை விட்டு வெளியேறி அந்த பெண், அந்த இளைஞனுடன் ஒரு வீட்டில் தங்கினார். இப்படியாக, இருவரும் கடந்த 12 ஆண்டுகளாகத் திருமணம் செய்து கொள்ளாமல், ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தார்கள். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், அந்த கள்ளக் காதல் ஜோடி, அந்த பகுதியில் இருந்து மத்திய மும்பைக்கு இடம் பெயர்ந்தனர். அப்படி, அந்த புதிய வீட்டிற்குச் சென்றது முதல், இந்த கள்ளக் காதல் ஜோடிகள் இடையே தொடர்ந்து சண்டை வந்துள்ளது. இருவருக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளதால், அவர்கள் 

இருவருக்குள்ளும் தொடர்ச்சியாகக் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அவர்கள் இருவரும் பேசிக்கொள்ளாமல் ஒரே வீட்டில், தனி தனியாக வசித்து வந்தார்கள்.

இப்படியாக, இவர்களது வாழ்க்கை சண்டையோடு போய்க்கொண்டிருந்த நிலையில். கடந்த வாரம் அந்த ஜோடிகளுக்கு இடையே மீண்டும் சண்டை வந்துள்ளது. 

அப்போது, இருவருக்குள்ளும் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டு உள்ளது. அப்போது, கடும் கோபம் அடைந்த அந்த காதலன், “ நீ வேண்டும் என்றால், என்னை விட்டுப் பிரிந்து போய் விடு, நான் வேறு ஒரு திருமணம் செய்து கொள்கிறேன்” என்று கூறி, சண்டை போட்டிருக்கிறார். 

இதனால், இன்னும் கோபப்பட்ட அந்த பெண், “இந்த வயசுக்குப் பிறகு நான் எங்கே போவது” என்று, சத்தம் போட்டுக் கத்தி மீண்டும் சண்டை போட்டு உள்ளார்.

இந்த சண்டையில் ஒரு கட்டத்தில் கடும் கோபம் அடைந்த அந்த காதலன், கோபத்தில் அந்த பெண்ணின் கழுத்தை நெரித்து, அவரின் தலையை ஒரு இரும்பு தடியால் அடித்து நசுக்கி மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். 

இதனையடுத்து, அந்த பெண்ணின் உடலை அங்கேயே விட்டு விட்டு, அந்த வீட்டில் இருந்து தப்பிச் சென்று விட்டார். இது குறித்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக விரைந்து வந்த போலீசார், அந்த வீட்டின் கதவை உடைத்து, கொலை செய்யப்பட்டுக் கிடந்த அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், காதலியை கொலை செய்து விட்டுத் தப்பியோடிய காதலனை மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர். 

இதனிடையே, 12 வருட கள்ளக் காதல் உறவு சலித்துப் போன நிலையில், காதலியுடன் சண்டைப்போட்டு காதலன் பிரிய நினைத்த நிலையில், இருவருக்குள்ளும் சண்டை வந்து கொலையில் முடிந்துள்ள இந்த சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.