51 வயது பெண்ணின் மேக்அப் அழகில் மயங்கி திருமணம் செய்துகொண்ட 26 வயது இளைஞன், காதல் நாடகம் ஆடி வந்த நிலையில், அது கொலையில் முடிந்துபோனது கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அடுத்து உள்ள காரகோணம் பகுதியை சேர்ந்த 51 வயது பெண் சகாவுக்கு, சொந்தமாக 10 ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. மிகவும் வசதி வாய்ப்பாக வாழ்ந்த இந்த பெண்ணிற்கு வீட்டோடு மாப்பிள்ளைக்காகக் காத்திருந்ததால், அந்த பெண்ணிற்குக் கடைசி வரை திருமணம் தள்ளிப்போய்கொண்டே இருந்தது. 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், அந்த பகுதியில் தனியார் மருத்துவமனையில் வரவேற்பாளராக பணியாற்றி வரும் 26 வயதான அருண் என்ற இளைஞர், 51 வயது 
பெண் சகாவுக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் ஆகி உள்ளார். அப்போது, ஒருவரை ஒருவர் மனசை பறிகொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அங்குள்ள ஒரு ஆலயத்தில் வைத்து கிறிஸ்தவ முறைப்படி அவர்களுக்கு முறைப்படி திருமணம் நடந்துள்ளது. திருமணம் நடந்து 2 மாதம் கூட ஆகாத நிலையில், அந்த 51 வயது பெண், சமையல் செய்யும் போது மின்சாரம் தாக்கி பலியானதாக அக்கம் பக்கத்தினரிடம் கணவன் அருண், கண்ணீர் விட்டுக் கூறியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான தகவல் அந்த பகுதியின் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து அங்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த 51 வயது பெண் சகாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது அங்கிருந்து ஒரு பெண் பேசும் போது, “வீட்டோடு மாப்பிள்ளையாக வந்த அருண் கடந்த சில தினங்களாக, சகாவிடம் சண்டையிட்டு வந்ததாக” கூறியுள்ளார்.

இதையடுத்து அருணை அழைத்துச்சென்ற போலீசார், தங்களது பாணியில் விசாரணை நடத்தி உள்ளனர். 

இந்த விசாரணையில், 51 வயதான பெண் சகா, எப்போதும் முகத்தில் மேக்அப் போட்டுக்கொண்டு பள பளப்பாக இளம் பெண் போலவே வலம் வருவார் என்றும், 
அப்படி மேக்அக் அழகில் மிகவும் பளபளப்பாக அந்த பெண் வலம் வந்ததால், அந்த பெண்ணின் அழகில் மயங்கிய 26 வயது இளைஞன் அருண், அந்த பெண்ணை காதலிப்பதாகக் கூறி உள்ளார். 

அத்துடன், அந்த பெண்ணை காதலிக்கத் தொடங்கிய பிறகு தான், காதலி சகாவுக்கு 51 வயது என்று அந்த இளைஞனுக்குத் தெரிய வந்தது. இதனால், காதலியைக் கழட்டிவிட அவன் திட்டமிட்டுள்ளான். ஆனால், 51 வயது பெண் சகா பெயரில் 10 ஏக்கர் நிலம், தினமும் ஆயிரக்கணக்கில் அழகு நிலைய வருமானமும் வருவதால், வேலைக்கே செல்லாமல் வீட்டிலேயே அமர்ந்து சாப்பிடும் யோகம் இருப்பதையும் புரிந்துகொண்ட அவன், திருமணத்துக்குச் சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அத்துடன், அருண் வீட்டில் அம்மா வயது பெண்ணை திருமணம் செய்து கொள்ள கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அதனை மீறி தான், அருண் தன் 51 வயது காதலியை கரம் பிடித்திருக்கிறான். திருமணத்திற்குப் பிறகு வீட்டோடு மாப்பிள்ளையாகக் குடித்தனம் நடத்தி வந்திருக்கிறார் இளைஞர் அருண்.

முக்கியமாக, திருமணத்திற்குப் பிறகு தன்னை கவனிக்காமல் மனைவி அவரது வயதான தாயை கவனித்துக் கொள்வதிலேயே அதிக ஆர்வம் காட்டியதால், கடும் கோபம் அடைந்த இளைஞன் அருண், அடிக்கடி 51 வயதான தன் மனைவி சகாவிடம் சண்டை போட்டு வந்துள்ளார்.

“கணவன், சிறுபிள்ளை என்பதால் சண்டையிடுவதாக எண்ணி அதனை பெரிது படுத்தாமல் அந்த 51 வயது மனைவி சகா, அழகு நிலையத்திற்குச் சென்று வந்து 
உள்ளார். 

அதன் தொடர்ச்சியாக, மனைவி சகா தனது திருமண புகைப்படத்தை முக நூலில் பதிவிட்டு அருணின் நண்பர்களுக்கும் ஷேர் செய்ததாக தெரிகிறது. இதையடுத்து அருணை தொடர்பு கொண்ட நண்பர்கள் அவனை பாட்டி ஹீரோ என்று கிண்டல் செய்து வந்துள்ளனர். இதனால், கடும் ஆத்திரம் அடைந்த அருண், சகாவை கொலை செய்து விட்டு மொத்த சொத்துக்களையும் அடைய திட்டமிட்டுள்ளான் என்றும் கூறப்படுகிறது.

திட்டத்தின் படி, வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த சகாவை மின்சார அடுப்பில் தள்ளி கொலை செய்ய முயன்று உள்ளான். ஆனால், அவர் அதிர்ஷ்டவசமாக அருணிடம் இருந்து தப்பிய சகா, தனக்கு நடந்த கொடுமை குறித்து பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் கூறியிருக்கிறார். 

இந்த நிலையில், சம்பவத்தன்று சகாவை அடித்து உதைத்து மின்சார வயரை உடலில் சுற்றி மின்சாரத்தைப் பாய்ச்சி மிகவும் கொடூரமான முறையில் தன் மனைவியை அவர் கொலை செய்து விட்டு, தன் மனைவி மின்சாரம் தாக்கி பலியானதாக சக உறவினர்களிடம் அவன் நாடகமாடியது தெரியவந்தது.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த போலீசார், அருணை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனால், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.