தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்பவர் நடிகர் யோகி பாபு. இவரது பெயர் இல்லாமல் திரைப்படங்கள் வெளியாவதே இல்லை என்றும் கூறலாம். சின்னத்திரை மூலம் அறிமுகமான இவர், தனது அயராத உழைப்பினால் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பிரபலமாக மாறியுள்ளார். 

கடந்த பிப்ரவரி மாதம் யோகிபாபுவிற்கும் மஞ்சு பார்கவிக்கும் திருமணம் நடைபெற்றது. ஆரணியில் உள்ள யோகிபாபுவின் குலதெய்வ கோவிலில் இவர்களது திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் யோகிபாபுவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது என்ற செய்தி வெளியானது. இதனை உறுதி படுத்தும் விதத்தில் நடிகர் மனோபாலா, யோகிபாபுவுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு செய்துள்ளார். 

இச்செய்தியை பார்த்த திரை ரசிகர்களும், குட்டி யோகிபாபு வந்தாச்சு என்று அவர்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக தகவல் வெளியானது. தந்தையான நடிகர் யோகிபாபுவுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது நம் கலாட்டா. 

சக்தி சிதம்பரம் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள திரைப்படம் பேய் மாமா. இந்த படத்தின் பாடல் மற்றும் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விக்னேஷ் ஏலப்பன் இந்த படத்தை தயாரிக்கிறார். ராஜ் ஆர்யன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். எம்.வி. பன்னீர்செல்வம் ஒளிப்பதிவு செய்கிறார். ப்ரீத்தம் எடிட்டிங் செய்கிறார். ராஜகோபால் வசனம் எழுதுகிறார். 

இவர் நடித்துள்ளா ஜெகஜாலக்கில்லாடி, பிஸ்தா ஆகிய திரைப்படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு காத்திருக்கிறது. இவர் நடிக்கவுள்ள சைத்தான் கா பச்சா, சதுரங்க வேட்டை2, அடங்காதே திரைப்படங்கள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், நின்று கொள்வான், பன்னிக்குட்டி, மண்டேலா, வெள்ளை யானை, கடைசி விவசாயி, கன்னி ராசி ஆகிய திரைப்படங்களின் வேலைகள் நடந்து கொண்டு வருகிறது.

யோகிபாபு கைவசம் ட்ரிப் திரைப்படம் உள்ளது. டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கும் இந்த படத்தில் நடிகை சுனைனா மற்றும் கருணாகரண் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர். த்ரில்லர் கலந்த நகைச்சுவை படமாக இந்த படம் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உதயஷங்கர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார். அடர்ந்த காட்டில் மாட்டுக்கொள்ளும் மனிதர்கள் எப்படி தப்பித்து வருகிறார்கள் என்பதே இதன் கதைக்கரு. 

இதுதவிர்த்து தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்தில் நடித்துள்ளார் யோகிபாபு. மாரி செல்வராஜ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பும் ஒட்டுமொத்தமாக முடிந்து ரிலீஸுக்கு காத்திருக்கிறது. சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் மிர்ச்சி சிவா நடிக்கும் சலூன் திரைப்படத்தில் இணைந்தார் யோகிபாபு.