14 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற உறவுக்கார பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். 

பீகார் மாநிலத்தில் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

உத்திர பிரதேச மாநிலம் பல்லியாவில் பனோ என்ற பெண், ஓரளவிற்கு வசதியான பெண் என்று கூறப்படுகிறது. இவரால், தனது வீட்டு வேலை செய்ய  முடியாமல் போகவே, அந்த பெண் அந்த பகுதியைச் சேர்ந்த பல பெண்களை வேலைக்கு அமர்த்திப் பார்த்து உள்ளார். ஆனால், அப்படி வீட்டு வேலைக்கு வந்த யாரும் சரிவர வேலை செய்யாத நிலையில், அவர்களெல்லாம் வேலைக்குச் சேர்ந்த உடனேயே வேலையை விட்டு நின்று விட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.

இதனால், அந்த பெண் பீகாரில் உள்ள தன்னுடைய உறவினரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த வீட்டில் ஒரு 14 வயதான சிறுமி இருந்துள்ளார். அந்த சிறுமி பார்ப்பதற்கு மிகவும் அழகாகக் காணப்பட்டு உள்ளார். இதனையடுத்து. அந்த சிறுமியின் தயாரிடம், “உங்கள் மகளை நான் என்னுடைய மகளாக பார்த்துக்கொள்கிறேன். அவரை படிக்கவும் வைக்கிறேன்” என்று பல பொய்களையும் கூறி, அந்த சிறுமியின் தாயாரிடம் பல ஆசை வார்த்தைகளையும் கூறி, அவரிடமிருந்து அந்த 14 வயது சிறுமி அழைத்துச் சென்றுள்ளார்.

அந்த பெண், அந்த 14 வயது சிறுமியுடன் பீகார் திரும்பியதும், அந்த சிறுமியை வைத்து பாலியல் தொழில் செய்ய முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக, பல பாலியல் தொழில் செய்யும் தரகர்களிடம் அந்த “சிறுமிக்கு எவ்வளவு ரேட் தருவீர்கள்’ என்று, பல தரகர்களிடம் அந்த பெண் பேசி வந்துள்ளார். இந்த விஷயம், எப்படியோ அந்த சிறுமிக்குத் தெரிய வந்தது. இதனைத் தெரிந்து கொண்ட அந்த சிறுமி, உடனடியாக அதே ஊரில் உள்ள குழந்தைகள் நல மையத்தை அணு புகார் அளித்துள்ளார். 

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த குழந்தைகள் நல அதிகாரிகள், அந்த சிறுமியின் பெற்றோரோடு அந்த வீட்டிற்கு விரைந்து சென்றுள்ளனர். அங்கு, அந்த சிறுமியிடம் அந்த உறவுக்கார பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்த உறவுக்கார பெண் முன்னிலையிலேயே, தன்னை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த அந்த பெண் யார் யாரிடம் என்னவெல்லாம் பேசி வந்தார் என்று, அந்த சிறுமி வெளிப்படையாகப் பேசி பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.

இதனைக் கேட்டு அந்த உறவுக்கார பெண் கடும் அதிர்ச்சியடைந்தார். அதனையடுத்து, அங்கிருந்து அந்த சிறுமியை மீட்டு அதிகாரிகள், அங்குள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பி வைத்தார்கள். 

மேலும், அந்த பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற அந்த பெண் பனோவை கைது செய்து போலீசார், அவர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.