அடிக்கடி கணவன் வெளியூர் சென்று வந்ததால், வீட்டில் தனியாக இருந்த வந்த அவரது மனைவியை, உள்ளூர் இளைஞர்கள் 3 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. 

எப்போதும் போலவே உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் தான் இந்த சம்பவமும் அரங்கேறி இருக்கிறது. 

உத்தரப் பிரதேசம் மாநிலம் ஷாஜஹான்ப்பூரில் அடுத்து உள்ள மிர்சாபூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 30 வயதான இளம் பெண் ஒருவர், தன்னுடைய கணவனுடன் வசித்து வந்தார்.

அப்போது, அந்த பெண்ணின் கணவர், அடிக்கடி வேலை விசயமாக வெளியூர் சென்று வருவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். அப்படி, வெளியூர் செல்லும் அந்த கணவன், பல நாட்கள் கழித்துத் தான் ஊர் திரும்புவது வழக்கமாக இருந்து உள்ளது.

இதன் காரணமாக, அவருடைய மனைவி வீட்டில் தனியாகவே இருந்து வந்தார். இதனை, அந்த பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள், நோட்டமிட்டு வந்தனர்.

அத்துடன், அந்த 30 வயது பெண் மீது அதே பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் சபலப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணின் கணவர் எப்போதும் போல மீண்டும் வேலை விசயமாக வெளியூர் சென்றிருக்கிறார்.

இதனையடுத்து, அந்த பெண்ணின் வீட்டை அப்பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் நோட்டமிட்டு வந்திருக்கிறார்கள். அதன் படி, அந்த பெண் தனது வீட்டில் இரவு நேரத்தில் நன்றாகத் தூங்கிக்கொண்டு இருந்திருக்கிறார்.

அப்போது, அந்த பகுதியைச் சேர்ந்த 3 இளைஞர்கள், அந்த பெண்ணின் வீட்டில் இரவு 10 மணி அளவில், சுவர் ஏறி குதித்தது அத்து மீறி நுழைந்திருக்கிறார்கள்.

இதனைப் பார்த்து, அந்த பெண் பயந்து நடுங்கிப் போய் உள்ளார். இதனையடுத்து, அந்த பெண் சத்தம் போட்டு உதவிக்கு ஆட்களை அழைக்கப் பார்த்து உள்ளார். அப்போது, அந்த 3 இளைஞர்களும், அந்த பெண்ணின் வாயை மூடியும், அந்த பெண்ணின் வாயில் துணியை அடைத்து வைத்து, அவரை கத்த முடியாமல் செய்து உள்ளனர். 

இதனையடுத்து, அந்த பெண்ணை அந்த 3 இளைஞர்களும் மாறி மாறி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். 

மேலும், அந்த பெண்ணிடம், “இந்த விஷயத்தை வெளியே யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவோம்” என்றும், மிக கடுமையாக மிரட்டி உள்ளனர். 
இதனால், அந்த பெண் இன்னும் பயந்து போய், இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லாமல் அப்படியே மறைத்து உள்ளார். 

இதனையடுத்து, அந்த பெண்ணின் கணவர் வெளியூரில் இருந்து திரும்பி வந்த நிலையில், தனக்கு நேர்ந்த பாலியல் பலாத்காரம் குறித்துக் கூறி, கதறி அழுது உள்ளார். இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் கணவர், இது தொடர்பாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார, சம்மந்தப்பட்ட 3 பேரையும் அதிரடியாகக் கைது செய்து, விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது. இதனையடுத்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் பணிகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.