தான் குளிப்பதை வீடியோ எடுத்து இளம் பெண் ஒருவர் தோழிக்கு அனுப்பிய நிலையில், அந்த தோழி தனது ஆண் நண்பனுக்கு அனுப்பி வைத்ததால், அவர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் பகுதியில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கருங்கல் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 23 வயது இளம் பெண்ணும், அதே பகுதியைச் சேர்ந்த சுவீட்டி என்ற இளம் பெண்ணும் தோழிகளாக பழகி வந்தனர்.

இந்த சூழலில் தான், 23 வயது இளம் பெண், ஆர்வமிகுதியால் தான் குளிப்பதை தனது செல்போனிலேயே வீடியோவாக எடுத்து உள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, தனது குளியல் காட்சியின் அந்த ஆபாச வீடியோ, தனது தோழியான சுவீட்டுக்கு அனுப்பி வைத்து உள்ளார். இதனைப் பார்த்து சற்று அதிர்ச்சியடைந்த அந்த இளம் பெண் சுவீட், தனது தோழியின் குளியல் வீடியோவை தனது ஆண் நண்பனான அங்குள்ள மிடாலம் 4 வது அன்பியத்தை சேர்ந்த சூசையா என்பவரின் மகன் ஜோக்சன் என்ற இளைஞருக்கு அனுப்பி வைத்து உள்ளார்.

இதனைப் பார்த்த அந்த இளைஞன், இந்த ஆபாச படத்தை, தனது மற்ற நண்பர்களுக்கும் அனுப்பி வைத்ததாக தெரிகிறது. இப்படியாக, இந்த ஆபாச வீடியோ ஒரு பக்கம் பரவிய நிலையில், மற்றொரு பக்கம் ஆபாச படத்தை வைத்துக் கொண்டு, தோழியின் ஆண் நண்பன் ஜோக்சன், சம்மந்தப்பட்ட அந்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த சம்மந்தப்பட்ட 23 வயதான இளம் பெண், எதுவும் எதிர்த்து பேச முடியாமல் இருந்ததால், இதயே தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஜோக்சன், அந்த இளம் பெண்ணுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் இதனை பொறுத்துக்கொள்ள முடியாத அந்த இளம் பெண், இது குறித்து அங்குள்ள கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்மந்தப்பட்ட இளம் பெண்ணின் தோழியான சுவீட்டி மற்றும் சுவீட்டியின் ஆண் நண்பன் ஜோக்சன் உள்பட மொத்தம் 5 பேர் மீது வழக்குப் பதிவு, தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.