பெண்ணை கொலை செய்து உடலை சாக்கு மூட்டைக்குள் கட்டி வீசிச்சென்றவரை போலீசார் கைது செய்தனர். 

ஈரோடு அடுத்து உள்ள ரங்கம்பாளையம் கே.கே. நகரில் இருக்கும் லட்சுமி கார்டன் குடியிருப்பு பகுதியில்  49 வயதான யோகநாதன் என்பவர் வசித்து வந்தார்.

கட்டிட மேற்பார்வையாளராக பணியாற்றி வரும் இவர், பல ஆண்டுகளுக்கு முன்பு பிரியா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டு அவருடன் வாழ்ந்து வந்தார்.

அதன் பிறகு, இவர்களுக்குள் திருமண வாழ்க்கை கசந்த நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு. அவர்கள் இருவரும் பிரிந்து தனித் தனியாக வாழ்ந்து வந்தனர்.

அதன் பிறகு, கட்டிட மேற்பார்வையாளர் யோகநாதன், கடந்த 6 ஆண்டுக்கு முன்பு வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

அவருடன் வாழ்க்கை நடத்தி வந்த நிலையில், அவர்களுக்குள்ளும் சண்டை வந்து, அந்த பெண்ணும் இவரை விட்டுப் பிரிந்து சென்றிருக்கிறார்.

இதனால், வாழ்க்கையே வெறுத்துப்போன யோகநாதன், அதன் பிறகு தனியாக இருக்க முடிவு செய்து, தனியாகவே வாழ்ந்து வந்தார்.

ஆனால், சில ஆண்டுகள் தனியாக இருந்த நிலையில், அதற்கு மேல் தனியாக வாழ முடியாமல் தவித்த யோகநாதன், அங்குள்ள ஒரு திருமண தகவல் மையத்தில் பணம் கட்டி திருமணத்திற்குப் பெண் கேட்டுப் பதிவு செய்தார். 

அதன் படி, அந்த திருமண தகவல் மையத்தின் சார்பில் ஜெயலட்சுமி என்று பெண்ணின் போன் நம்பரை, அந்த மையத்தினர் கொடுத்திருக்கின்றனர்.

அதன் பிறகு, யோகநாதன், அடிக்கடி ஜெயலட்சுமியோடு பேசி வந்திருக்கிறார். அதன் படி, ஒரு நாள் அவரை நேரில் சந்திக்க வரச் சொல்லியிருக்கிறார்.

அப்போது, அந்த பெண்ணை அவருக்குப் பிடிக்காததால் அவரை வீட்டை விட்டுப் போக சொல்லியிருக்கிறார் யோகநாதன். 

ஆனால், அந்த பெண் இன்று ஒரு நாள் இரவு தங்கி விட்டு காலையில் போவதாக அவரைிடம் கூறியிருக்கிறார்.

அதன்படியே, வேறு வழியில்லாமல் அதற்கு அவர் சம்மதிக்கவே, அன்று இரவு முழுவதும் அவரது வீட்டில் அந்த பெண் தங்கியிருக்கிறார்.

ஆனால், மறுநாள் காலையில் அந்த பெண் “நான் உன் வீட்டை விட்டுப் போக வேண்டும் என்றால், எனக்கு 10 பவுன் நகையை நீ தர வேண்டும் என்றும், இல்லையென்றால் இந்த ஊரையே கூட்டி நீ என்றைய கெடுத்துட்டேனு சொல்லிவிடுவேன்” என்றும் கூறி, அந்த பெண் மிரட்டியிருக்கிறார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த யோகநாதன், பயந்துபோய் அந்த பெண்ணிடம் பேச்சுக் கொடுப்பது போல் கொடுத்து, பயத்திலேயே அந்த பெண்ணை அவர் கொலை செய்திருக்கிறார்.

மேலும், அந்த பெண்ணின் உடலை ஒரு சாக்கு பையில் மூட்டையாகக் கட்டி அந்த பகுதியில் குப்பை கொட்டும் ஒரு இடத்தில் வீசி விட்டுச் சென்றிருக்கிறார்.

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிந்த நிலையில், உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். இதனையடுத்து. அந்த பெண்ணை கொலை செய்த யோகநாதனை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.