பாலிவுட் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான நடிகை அனுஷ்கா ஷர்மா, ஷாருக் கான் கதாநாயகனாக நடித்த ரப் னே பனா டி ஜோடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி கிட்டத்தட்ட தற்போது ஹிந்தியின் நட்சத்திர நடிகர்கள் அனைவருடனும் இணைந்து  சூப்பர் ஹிட் பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

குறிப்பாக அக்ஷய் குமாருடன் பட்டியாலா ஹவுஸ், அமீர்கானுடன் PK, சல்மான் கானுடன் சுல்தான், ரன்பீர் கபூருடன் சஞ்சு, ஷாருக்கானுடன் ஜப் ஹரி மெட் செஜல்,ஜீரோ  உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள அனுஷ்கா ஷர்மா தயாரிப்பாளராகவும் தனது கிளீன் ஸ்லேட் பிலிம்ஸ் சார்பில் பல திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக தயாரிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்த நடிகை அனுஷ்கா ஷர்மா தற்போது மீண்டும் நடிக்கும் புதிய திரைப்படத்தில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முக்கிய வீராங்கனையான ஜுலான் கோஸ்வாமியின் பயோபிக் திரைப்படமாக தயாராகும் சக்டா எக்ஸ்ப்ரஸ் படத்தில் வேகப்பந்துவீச்சாளர் ஜுலான் கோஸ்வாமியின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கர்னேஷ் ஷர்மா & அனுஷ்கா ஷர்மாவின் கிளீன் ஸ்லேட் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் சக்டா எக்ஸ்பிரஸ் திரைப்படத்திற்கு அபிஷேக் பானர்ஜி கதை & திரைக்கதை எழுத, புரோசீட் ராய் இயக்குகிறார். இத்திரைப்படம் நேரடியாக நெட்ஃபிலிக்ஸில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் விதமாக அசத்தலான டீசர் வெளியானது. அந்த டீசர் இதோ...