17 வயது சிறுவன் ஒருவன், 32 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, அவரை எரித்துக் கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

தலைநகர் டெல்லியில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

டெல்லி உள்ள துவாரகா பகுதியைச் சேர்ந்த 17 வயதான சிறுவன் ஒருவன், அங்குள்ள பள்ளியில் படித்து வருவதாகக் கூறப்படுகிறது.

அத்துடன், தனது பெற்றோருடன் வசித்து வந்த அந்த சிறுவன், அதிக நேரம் செல்போனில் மூழ்கி கிடந்ததாகவும் கூறப்படுகிறது.

இப்படியான சூழலில், அந்த 17 வயது சிறுவனின் வீட்டின் அருகே வசித்து வந்த 32 வயதான இளம் பெண் மீது, அந்த சிறுவனுக்கு சபலம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால், அந்த பெண்ணை எப்படியும் பாலியல் பலாத்காரம் செய்ய அந்த சிறுவன் திட்டமிட்டு வந்தான் என்றும் கூறப்படுகிறது.

அதன் படி, அந்த 17 வயது சிறுவன் கடந்த சில நாட்களுக்கு முன்பு, அந்த பெண்ணின் வீட்டியால் யாரும் இல்லை என்பது உறுதிச் செய்துகொண்டு, அந்த வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த அவன், அந்த பெண்ணின் கைகளை கட்டி போட்டு, அவரை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், கடும் எதிர்ப்புத் தெரிவிக்கவே, அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து முடித்ததும், “இந்த பெண் எப்படியும், நம்மை போலீசில் சிக்க வைத்து விடுவார்” என்று எண்ணிய அந்த சிறுவன், அந்த இளம் பெண்ணை, போலீசார் உட்பட யாரும் கண்டுபிடிக்காமல் இருப்பதற்காக அந்த பெண்ணை கொலை செய்து, அவரின் பிறப்புறுப்புகளை முற்றிலுமாக தீ வைத்து எரித்து இருக்கிறான்.

அதன் பிறகு, தீயில் எரிந்த அந்த பெண்ணின் எரிந்த உடலை, ஒரு சாக்கு பையில் கட்டி அந்த பகுதியில் ஓடும் ஒரு சாக்கடையின் அருகே வீசி விட்டுச் சென்று இருக்கிறான்.

அதன் பிறகு, போலீசார் அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில், இது குறித்து வழக்குப் பதிவு செய்து, தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும், இந்த வழக்கில் ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டு, விசாரணை இன்னும் துரிதப்படுத்தப்பட்ட நிலையில், உயிரிழந்த 32 வயது பெண்ணின் புகைப்படம் பல்வேறு வாட்ஸ்ஆப் குரூப்புகளில் பகிரப்பட்டது. 

இதனால், இந்த கொலை சம்பந்தமாக கிட்டதட்ட 2700 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில், அந்த பெண்ணின் வீட்டின் அருகே வசிக்கும் 17 வயதான சிறுவன் தான் இந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, அந்த சிறுவனை கைது செய்த போலீசார், அந்த சிறுவன் பயன்படுத்திய ஒரு மாருதி வேன், இரும்பு குழாய், மண்ணெண்ணெய், டேப், எரிந்த துணிகள் உள்ளிட்டவற்றை காவல்துறை பறிமுதல் செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தான் இந்த பாலியல் பலாத்காரம் பற்றிய தகவல்கள் தெரிய வந்தது. 

மேலும், இந்த வழக்கில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.