தமிழ் திரையுலகில் பிரபல இளம் நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் நடிகர் வைபவ். கடைசியாக இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் நடிகர் வைபவ் மற்றும் நடிகை வாணிபோஜன் இணைந்து நடித்த மலேசியா அம்னீசியா திரைப்படம் கடந்த மே மாதம் ஜி5 OTT தளத்தில் வெளியானது. 

அடுத்ததாக இயக்குனர் பரி.கே.விஜய் இயக்கத்தில் தயாராகும் ஆலம்பனா திரைப்படத்தில் நடிகர் வைபவ் கதாநாயகனாக நடித்துள்ளார். KJR ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ஆலம்பனா திரைப்படத்தில் நடிகை பார்வதி நாயர் கதாநாயகியாக நடித்துள்ளார். 

கலகலப்பான நகைச்சுவை திரைப்படமாக தயாராகியிருக்கும் ஆலம்பனா திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் முனீஸ்காந்த் ராமதாஸ், திண்டுக்கல் ஐ.லியோனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்க ஒளிப்பதிவாளர் வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். 

முன்னதாக சில வாரங்களுக்கு முன்பு வெளியான ஆலம்பனா படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ஆலமரத்திலிருந்து ஒப்பனிங் சாங் இது என்ற புதிய பாடல் வெளியானது. ஹிப் ஹாப் ஆதி இசையில் வெளிவந்த கலக்கலான இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்.