பலவந்தமாக மது குடிக்க வைத்து இளம் பெண்ணை 2 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கர்நாடகா மாநிலம் தாவணகெரே தாலுகா மாசரஹள்ளி கிராமத்தில் கணவரை பிரிந்த ஒரு இளம் பெண், தனது சகோதரி வீட்டில் தங்கி இருந்து வருகிறார். 

அந்த பெண், தனது கிராமத்தில் உள்ள தனது சகோதரிக்கு சொந்தமான ஒரு விவசாய நிலத்தில் நேற்றைய தினம் வேலை செய்து கொண்டு இருந்தார். 

அப்போது, அங்கு குடிபோதையில் வந்த மாசரஹள்ளி கிராமத்தை சேர்ந்த பிரபு மற்றும் அவரனது கூட்டாளி கிரண் ஆகிய இருவரும் சேர்ந்து, அந்த வயலில் தனியாக நின்றுக்கொண்டிருந்த அந்த பெண்ணுக்கு முதலில் பாலியல் தொல்லை கொடுத்து உள்ளனர்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், முதலில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே, கடும் ஆத்திரம் அடைந்த கிரணும், பிரபுவும், அந்த பெண்ணை பலவந்தமாக பிடித்துக்கொண்டு, வலுக்கட்டாயமாக வாயில் மதுவை ஊற்றி அந்த பெண்ணை குடிக்க வைத்து உள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, அந்த பெண்ணை அந்த இருவரும் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். இதனால், அந்த பெண் அவர்களிடம் இருந்து போராடிய நிலையில், சத்தம் போட்டு அலறி துடித்து உள்ளார்.

அப்போது, அந்த வழியாக வந்த ஒருவர், அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த நிலையில், போதை ஆசாமிகள் இருவரும் அங்கிருந்து தப்பித்து ஓடி உள்ளனர். 

அத்துடன், பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான அந்த பெண், கடுமையாக தாக்கப்பட்டத்தில் பலத்த காயம் ஏற்பட்டு, உயிருக்கு போராடி உள்ளார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த நபர், இது பற்றி உனடியாக அங்குள்ள தாவணகெரே புறநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளார். உடனடியாக, இது சம்மந்தபமாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை மீட்டு, அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அந்த பெண்ணுக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இந்த பாலியல் பலாத்காரம் சம்பவம் பற்றி வழக்குப் பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அந்த பெண்ணுக்கு, வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றி குடிக்க வைத்து, அதன் பிறகு அவரை பலவந்தமாக கூட்டுப் பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, தலைமறைவாக உள்ள கிரண் மற்றும் பிரபுவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.