ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு முடக்கமும் அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

curfew

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் இரண்டாவத நாளாக அவர் மருத்துவ நிபுணர்கள், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இன்றும் அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது உருமாறிய ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில் மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. குறிப்பாக தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க அரசு திட்டமிட்டுயிருந்தது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடு, நாளை ஜனவரி 6 முதல் அமலுக்கு வருகிறது. அந்த நேரத்தில் மாநிலத்திற்குள் பொது மற்றும் தனியார் பேருந்து சேவைகள் மட்டும் அனுமதிக்கப்படும் என தெரிகிறது. தொடர்ந்து 9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலுக்கு வருகின்றது.

இந்நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டார். இந்தக் கூட்டத்தில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவ நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இது தொடர்பாக சிறிது நேரத்துக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அதனால் இனி ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவிருக்கிறது. அதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்றுவரும் தடுப்பூசி முகாம் இனி சனிக்கிழமைகளில் நடைபெறும் என்று தெரிவித்திருந்தார்.

மேலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் தொடர்ந்து செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்கள், கடைகளை மூட பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் மற்றும் மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டும் வீட்டைவிட்டு வெளியே செல்லுமாறும், கூட்டம் கூடுவதைத் தவிர்க்குமாறும் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.