2021 ஆம் ஆண்டில் மறக்க முடியாத பல சம்பவங்கள் நடந்திருந்தாலும், தமிழ்நாட்டில் அரசியல் ரீதியான பல்வேறு சம்பங்களும் நடந்து பல மாற்றங்களையும் ஏற்படுத்தியிருக்கின்றன. அந்த வகையில் 2021 ஆம் ஆண்டு அரசியல் ரீதியாக பலரையும் கவனிக்க வைத்த முக்கிய தருணங்களை தற்போது பார்க்கலாம்.. 

சம்பவம் 1

ஏப்ரல் 6, தமிழ்நாட்டின் 16 வது சட்டமன்றத் தேர்தல், தமிழ்நாட்டின் 234 தொகுதிகளுக்கும் நடைபெற்றது. 
இதில், கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறக, தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் மாபெரும் வெற்றி பெற்றது. 

மே 7, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல் முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றார். மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்ற நிகழ்வின்போது, “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்” என்று, அவர் கூறிய போது, முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா, உணர்ச்சி பெருக்கால் அழுதார். இது, இணையத்தில் பெரும் வைரலானது.

அதாவது, தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலையானது, உச்சத்தில் இருந்தபோது முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின், அடுத்த சில நாட்களிலேயே கொரோனா சிகிச்சைப் பிரிவுக்குக் கவச உடையோடு சென்று ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தார். 

சம்பவம் 2

2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் உடல் நலக்குறைவு காரணமாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிடவில்லை. அவர், வாக்களிக்கவும் வரவில்லை. 

சம்பவம் 3 

2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், இந்த தேர்தலில் தோல்வி அடைந்தார். அவரது கட்சியினரும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதாவது, கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 3.7 சதவீதமாக இருந்த அக்கட்சியின் வாக்கு சதவிகிதம் இந்த சட்டமன்றத் தேர்தலில் 2.5 சதவீதமாக குறைந்தது. தேர்தலுக்குப் பிறகு, அவரது கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் பலரும் விலாகினார்கள். இதனையடுத்த, “மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக மட்டுமல்லாது அக்கட்சியின் பொதுச்செயலாளராகவும் பணியாற்ற இருப்பதாக” நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்.

சம்பவம் 4 

எப்படியும் இந்த முறை அரசியலுக்கு வருவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த், மக்கள் மன்றத்தைக் கலைத்தார். அதாவது, ஜூலை 12, ஆம் தேதி “எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் தனக்கு இல்லை” என்று, அதிரடியாக அறிவித்த நடிகர் ரஜினிகாந்த். 

சம்பவம் 5

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருந்த சசிகலா, கடந்த ஜனவரி மாதத்தின் இறுதியில் விடுதலையான நிலையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து பிப்ரவரி 18 ஆம் தேதி தான் சசிகலா தமிழகம் திரும்பினார். அப்போது, சசிகலாவிற்கு வழி நெடுகிலும் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, “தீவிர அரசியலுக்கு நான் வருவேன்” என்று, அதிரடியாக அறிவித்தார். பின்னர், அதே சசிகலா, மார்ச் மாதத்தில் “நான் அரசியலை விட்டு ஒதுங்கப்போகிறேன்” என்றும், அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இவற்றுடன், “ஆன்மீக பயணம் கிளம்புவதாக” அறிவித்த சசிகலா, திடீரென்று தொடர்ச்சியாக அதிமுக பிரமுகர்களுடன் செல்போனில் பேசி, அதனை ஆடியோவாக ஒவ்வொன்றாக வெளியிட்டு, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

சம்பவம் 6

டிசம்பர் 7, சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்திற்கு நேரில் சென்று சசிகலா சந்தித்து பேசினார். அதாவது, போயஸ் கார்டனில் கடந்த 6 ஆம் தேதியன்று சசிகலா ரஜினிகாந்தை சந்தித்தது, அவர் தாதாசாகிப் பால்கே விருது பெற்றதற்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக கூறப்பட்டது. ஆனால், உண்மையில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது அதற்காக அல்ல என்றும், ரஜினியை சந்தித்து உதவி கேட்பதற்காத் தான் இந்த சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது என்றும் தகவல்கள் கசிகிறது. அதுவும், நடிகர் ரஜினி பிரதமர் மோடி, மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் பேசுவதற்காகதான்” இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. 

சம்பவம் 7

2021 சட்டசபைத் தேர்தலில், பல ஆண்டுகளுக்கு பிறகு திமுக உடன் மதிமுக கூட்டணி அமைத்தது. கிட்டதட்ட, 15 ஆண்டுகளுக்கு பிறகு திமுக கூட்டணியுடன், மதிமுக இணைந்தது. அதே நேரத்தில், கூட்டணி அமைத்த வேகத்தில், “நாங்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளதாகவும்” வைகோ அறிவித்தார்.

சம்பவம் 8

2021 தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, “கள்ள உறவில் பிறந்த குறை பிரசவ குழந்தை இபிஎஸ்” என, திமுக எம்.பி. ஆ.ராசா பேசியது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்கள் தெரிவித்த நிலயைில், சில நாட்களில் அ.ராசா, எடப்பாடி பழனிசாமியிடம் மன்னிப்பு கேட்டார். 

சம்பவம் 9

2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக, தமிழகத்தில் கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு 4 இடங்களில் வெற்றி பெற்றது. 4 பாஜக எம்எல்ஏக்கள் தமிழக சட்டசபைக்கு நுழைய காரணமாக இருந்த அக்கட்சியின் அப்போதைய தலைவர் எல்.முருகனுக்கு, மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதனால், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி, அண்ணாமலை தமிழ்நாடு பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.

சம்பவம் 10

தமிழக பாஜக பொதுச் செயலாளராக இருந்த கே.டி. ராகவனின் பாலியல் வீடியோ இணையத்தில் வெளியாகி தமிழக அரசியலில் மட்டுமில்லாது, இந்திய அரசியலிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து, கே.டி.ராகவன் பாஜகவின் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார்.

குறிப்பாக, துணை நடிகை கொடுத்த பாலியல் புகாரில், முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் அதிரடியாக கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.