தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராகவும், இந்திய சினிமா ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோக்களில் ஒருவராகவும்  வலம் வருபவர் நடிகர் அல்லு அர்ஜுன். முன்னதாக இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா The-Rise Part-1 திரைப்படம் கடந்த  டிசம்பர் 17ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது. 

புஷ்பா திரைப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, நடிகர் ஃபகத் பாசில் மிரட்டலான வில்லனாக நடித்துள்ளார். 
மேலும் பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு, தனஞ்செய், சுனில், ஹரிஷ் உத்தமன் ஆகியோர் நடித்துள்ள புஷ்பா திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம்செட்டி மீடியா இணைந்து தயாரித்துள்ளது.

தெலுங்கு,தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் புஷ்பா திரைப்படம்வெளியாகியுள்ள புஷ்பா திரைப்படத்திற்கு மிர்ரோஸ்லா குபா ப்ரோஸ்கி ஒளிப்பதிவில், கார்த்திகா ஸ்ரீநிவாஸ் படத்தொகுப்பு செய்ய,  ராக்ஸ்டார் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். 

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள புஷ்பா படத்தில் நடிகை சமந்தாவின் நடனத்தில் இடம் பெற்ற “ஊ சொல்றியா மாமா ஊஊ சொல்றியா மாமா” பாடலும் ஹிட் அடித்துள்ளது. இந்நிலையில் புஷ்பா திரைப்படத்தின் DELETED SCENE ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. ட்ரெண்டாகி வரும் அந்த DELETED SCENE இதோ...