விஜய் தொலைக்காட்சியில்  சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு சிறப்பாக பாடி அசத்திய சிவாங்கி, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துகொண்டு கொஞ்சும் குரலாலும் குழந்தைத்தனமான சேட்டைகளாலும் மக்களின் மனதில் இடம் பிடித்தார்.

பாடகியாகவும் கலக்கி வரும் சிவாங்கி வெள்ளித்திரையில் முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் இடம்பெற்ற டாக்கு லெஸ்ஸு ஒர்க்கு மோரு, என்ன சொல்ல போகிறாய் படத்தில் உருட்டு, வேலன் படத்தில் இடம்பெற்ற சத்தியமா சொல்லுறேன்டி, ஆனந்தம் விளையாடும் வீடு படத்தில் நீ என் உசுரு புள்ள, கூகுள் குட்டப்பா படத்தில் பொம்ம பொம்ம உள்ளிட்ட பல பாடல்களைப் பாடியுள்ளார்.

மேலும் சிவாங்கி பாடிய அஸ்கு குமாரோ அடிபொலி ஆகிய ஆல்பம் பாடல்களும் யூடியூபில் ட்ரெண்டாகி வரும் நிலையில்,  சமீபத்தில் சிவாங்கி பாடி நடித்து வெளிவந்த ஆல்பம் பாடல் நோ நோ நோ நோ  பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

கார்த்திக் தேவராஜ் இசையில் ரவூஃபா எழுதிய இந்தப் பாடலை சிவாங்கி பாடி நடித்திருந்தார். இந்நிலையில் இந்தப்பாடலின் கலக்கலான மேக்கிங் வீடியோ தற்போது வெளியானது. சிவாங்கியின் சேட்டை தனம் நிறைந்த இந்த BLOOPER வீடியோ யூடியூபில் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோ இதோ…