“சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும்” என்றும், மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ள நிலையில், “தமிழகத்தில் கொரோனா ஊரடங்கை நீட்டிப்பது குறித்து” முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார்.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த சில மாதங்களாக தொடர்ந்து குறைந்து காணப்பட்டு நிலையில், இன்றைய தினம் திடீரென்று என்று அதிகரித்து 10 ஆயிரத்தை தாண்டி பதிவாகி இருக்கிறது. 

இதனால், மத்திய அரசு அந்தந்த மாநிலங்களுக்கு தனித் தனியாக அறிவுறுத்தல்களை வழங்க உள்ளன. 

அந்த வகையில், தமிழக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு, மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன் பல்வேறு அறிவுறித்தல்களை வழங்கி இருக்கிறார். 

அதன்படி, “வெளிநாடுகளில் இருந்து சென்னை வரும் பயணிகளை கண்காணிக்க வேண்டும்” என்றும், அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

“தமிழகத்தில் சென்னை மாவட்டத்தில் மட்டும் கடந்த 2 வாரங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளதை சுட்டிக்காட்டி மத்திய அரசு, இந்த அறிவுரையை வழங்கியிருப்பதுடன், “சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும்” என்றும், மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

இதன் காரணமாகவே, “புத்தாண்டு அன்று சென்னையில் ஒரே நேரத்தில் அதிகமான மக்கள் பொது இடங்களில் கூடுவார்கள் என்பதால், “சென்னையில் டிசம்பர் 31 ஆம் தேதி இரவு 12 மணியில் இருந்து, ஜனவரி 1 ஆம் தேதி அதிகாலை 5 மணி வரை அத்தியாவசிய வாகனங்கள் தவிர மற்ற வாகனங்களுக்கு அனுமதி இல்லை” என்று, அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், “கொரோனா தற்போது அதிகரிக்க தொடங்கி உள்ளதால், மக்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்” என்று, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழக மக்களுக்கும் வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.

இந்த சூழலில், தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு உத்தரவானது வரும் 31 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதால், “தமிழகத்தில் மேலும் ஊரடங்கை நீட்டிக்கலாமா? அப்படி நீட்டிக்கும் போது இன்னும் என்னென்ன புதிய கட்டுப்பாடுகள் விதிக்கலாம்?” என்பது பற்றி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளைய தினம் முக்கிய ஆலோசனை நடத்த இருக்கிறார்.

முக்கியமாக, இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது, “தமிழகத்தில், பள்ளிகளில் சுழற்சி முறை வகுப்புகள் மீண்டும் தொடர்வது குறித்து நாளைய தினம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முக்கிய முடிவு எடுக்க உள்ளதாகவும்” தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது, “தமிழகத்தில் ஜனவரி 3 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளில் சுழற்சி முறை வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, அனைத்து மாணவர்களும் பள்ளி, கல்லூரிகளுக்கு வரலாம்” என்று, தமிழக அரசு அறிவித்து இருந்தது. 

இந்த சூழலில் தான், தமிழகத்தில் தற்போது ஒமைக்ரான் பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், இது குறித்து தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து சுட்டிகாட்டி வருவதால், ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் மீண்டும் சுழற்சிமுறை வகுப்புகளை இன்னும் சில மாதங்களுக்கு தொடர்வது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்னறும், தலைமை செயலாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறிபாக, நாளைய தினம் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில், உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானியான சௌமியா சுவாமிநாதனும் கலந்துகொள்வார் என்றும், தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், நாளை நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.