தமிழ் சினிமா ரசிகர்களின் பேவரைட் ஹீரோவாகவும்,  இந்திய திரை உலகின் உச்ச நட்சத்திரம் நடிகர்களில் ஒருவராக விளங்கும் நடிகர் அஜித் குமார்  நடித்துள்ள வலிமை திரைப்படம் அடுத்த ஆண்டு (2022) பொங்கல் விருந்தாக வருகிற ஜனவரி 13-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. 

சதுரங்கவேட்டை, தீரன் மற்றும் நேர்கொண்டபார்வை படங்களை இயக்கிய இயக்குனர் H.வினோத் வலிமை படத்தை இயக்கியுள்ளார்.  அஜித்குமார் உடன் இணைந்து வலிமை திரைப்படத்தில் ஹூமா குரேஷி, யோகி பாபு, விஜய் டிவி புகழ் ஆகியோர் நடிக்க, மிரட்டலான வில்லனாக கார்த்திகேயா நடித்துள்ளார்.

அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ள வலிமை படத்தில் திலிப் சுப்புராயன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ள வலிமை படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். போனி கபூரின் பே வியூ ப்ராஜெக்ட்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள வலிமை திரைப்படத்தை கோபுரம் சினிமாஸ் வெளியிடுகிறது.

முன்னதாக வெளியான வலிமை மோஷன் போஸ்டர் ,Glimpse மற்றும் வலிமை மேக்கிங் வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில், நேற்று (டிசம்பர் 30) வெளியான வலிமை ட்ரைலர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் வலிமை திரைப்படத்தின் கர்நாடகா ரிலீஸ் உரிமையை கமர் ஃபிலிம் ஃபேக்டரி  நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.