தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்திய அணியானது, தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

அதன்படி, இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது கிரிக்கெட் போட்டியானது கடந்த 26 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியானது தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு 305 ரன்களை இலக்காக நிர்ணயித்து இருந்தது. 

அதன்படி, நேற்றைய தினம் 4 ஆம் நாள் போட்டியின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்க அணி, இன்றைய தினம் 5 ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடியது.

இன்றைய தினம், இந்திய வீரர்களின் அபார பந்து வீச்சால் தென்னாப்பிரிக்க அணி 191 ரன்களில் சுருண்டு போனது.

இதனால், இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுது.

குறிப்பாக, இந்த 2 வது இன்னிங்சில் இந்திய அணியின் சார்பில் பும்ரா 3 விக்கெட்டும், ஷமி 3 விக்கெட்டும், சிராஜ் மற்றும் அஷ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியின் வெற்றிக்கு வித்துள்ளனர். அசத்தி உள்ளனர்.

இந்த வெற்றியின் மூலமாக, இந்த டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில், இந்திய அணி தற்போது முன்னிலை வகிக்கிறது.

முக்கியமாக, தென் ஆப்பிரிக்க அணியை அவர்களது மண்ணில் வீழ்த்தி தற்போது இந்திய அணி புதிய சாதனையுடன் இந்த வெற்றியை பதிவு செய்து உள்ளதை, இந்திய கிரிக்கெட் ரசிர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்.