தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகராகவும் ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாகவும் வலம் வருகிறார் நடிகர் விஜய் தேவரகொண்டா. அடுத்ததாக தெலுங்கு மற்றும் ஹிந்தி என இரு மொழிகளில் தயாராகி,  இந்தியாவின் பல்வேறு மொழிகளில் ரிலீசாகவுள்ள லைகர் திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா நடித்து வருகிறார். 


போக்கிரி & பிசினஸ்மேன் என மெகா ஹிட் திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகி  வரும் லைகர் படத்தை நடிகை சார்மி மற்றும் பூரி ஜெகநாத் அவர்களின் பூரி கனெக்ட்ஸ் மற்றும் தர்மா புரோடக்சன்ஸ் இணைந்து தயாரிக்க,யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் வழங்குகிறது. 

அடுத்த ஆண்டு 2022 ஆகஸ்ட் 25 ஆம் தேதி ரிலீசாக உள்ள லைகர் படத்தில் குத்து சண்டை வீரராக விஜய் தேவரகொண்டா நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அனன்யா பாண்டே நடித்து வரும் லைகர் படத்தில் ரம்யா கிருஷ்ணன், ரோனிட் ராய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, லைகர் திரைப்படத்தின் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை சாம்பியனான மைக் டைசன் நடிக்கிறார்.

லைகர் திரைப்படத்தின் பாடல்களுக்கு தனிஷ்க் பக்ச்சி இசையமைக்க பிரபல இசையமைப்பாளர் மணிஷர்மா பின்னணி இசை சேர்க்கிறார்.  இந்நிலையில் ரசிகர்களுக்கு புத்தாண்டு விருந்தாக தற்போது வெளியாகி உள்ளது லைகர் படத்தின் GLIMPSE வீடியோ. விஜய் தேவர்கொண்டாவின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த மிரட்டலான இந்த  GLIMPSE வீடியோ இதோ…