“அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை” என்ற, சிறுகதை தொகுப்பிற்காக, எழுத்தாளர் மு.முருகேஷுக்கு 2021 ஆம் ஆண்டிற்கான “பால சாகித்ய புரஸ்கார்” விருது அறிக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசால் ஆண்டு தோறும் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டு வருகிறது.

அதாவது, கடந்த 1957 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி சாகித்ய அகாடமி என்னும் ஒரு அமைப்பு, மத்திய அரசால் தொடங்கப்பட்டது. 

இந்த சாகித்ய அகாடமியானது, இந்திய மொழிகளில் உள்ள இலக்கியம், இலக்கியம் சார்ந்த நவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் தொடங்கப்பட்டு, அதன்படி செயல்பட்டு வருகிறது.

இந்த சாகித்ய அகாடமி தொடங்கப்பட்டது முதல் தற்போது வரை 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலக்கிய கூட்டங்களும், பயிற்சி முகாம்களும் இன்னும் பிற இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளும் நடத்திப்பட்டு இருக்கிறது.

அத்துடன், இந்திய மொழியில் வெளிவரும் சிறந்த படைப்புகளை பிற மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியிடுவதுடன், சிறந்த படைப்புகளுக்கும் ஆண்டுதோறும் விருதினை அளித்து, சிறந்த படைப்பாளர்களை இன்னும் ஊக்கப்படுத்தியும் வருகிறது.

இப்படியாக ஆண்டு தோறும் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த படைப்புகளுக்கு பரிசு தொகையாக ஒரு லட்சம் ரூபாயும், ஒரு பட்டயமும் வழங்கி அதன் படைப்பாளர்கள் கவுரவிக்கப்பட்டு வருகிறார்கள்.

இவ்வாறாக, 24 இந்திய மொழிகளில் சிறுகதை நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பல வகையிலான எழுத்தாளர்களுக்கு சாகித்ய அகாடமி விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் தான், தற்போது 2021 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, சிறுகதை எழுத்தாளர் அம்பை என்கிற சி.எஸ்.லட்சுமிக்கு இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விருதுடன் அவருக்கு 1 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படும் என்றும், அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதாவது, தமிழ் மொழியில் “சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை” என்ற சிறுகதைக்காக, எழுத்தாளர் அம்பைக்கு இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

தமிழின் மிகச் சிறந்த பெண் படைப்பாளிகளுள் ஒருவரான அம்பை, கடந்த 1960 ஆம் ஆண்டு முதல் எழுத்துலகில் தடம் பதித்து வருகிறார்.

அதே போல், “அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை” என்ற, சிறுகதை தொகுப்பிற்காக எழுத்தாளர் மு.முருகேஷூக்கு “பால புரஸ்கர் சாகித்ய விருது” அறிவிக்கப்பட்டு உள்ளது. 

“கவிதை, சிறுகதை, ஹைக்சு, சிறுவர் இலக்கியம் என்றும், படைப்பிலக்கிய உலகில் பல்வேறு துறை சார்ந்து கிட்டதட்ட 30 ஆண்டுகளாக எழுத்தாளர் மு.முருகேஷ் எழுத்துலகில் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டவர்.

முக்கியமாக, கடந்த 2010 ஆம் ஆண்டு மு.முருகேஷ் எழுதிய குழந்தைகள் சிறுகதைகள் என்ற நூல், தமிழக அரசின் புத்தக பூங்கொத்து திட்டத்தில் தேர்வாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.