பள்ளிக்கூடத்திற்கு பங்க் அடித்த சிறுவன் ஒருவன், பள்ளிக்கூடத்தின் கேட்டிற்கு வெளியே வரும் போது, எம்.எல்.ஏ.வும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் எதிரே வந்து நின்றதால், அவர்களை மேலும் கீழும் பார்த்த சிறுவன் மீண்டும் வகுப்பறைக்கே திரும்பிச் சென்ற நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது.

நம்ம தமிழ்நாட்டில் இளசுகள், எந்த விசயம் கிடைத்தாலும் அதனை மீம்ஸாகவே தெறிக்கவிடுவார்கள். ஆனால், அவர்களது கையில் மீம்கான ஒரு கன்டெண்ட் கிடைத்தால் சும்மாவா விட்டு வைப்பார்கள். அப்படியான ஒரு மீம் கன்டெண்ட்டைப் போன்ற ஒரு நிகழ்வுதான் உண்மையில் நடந்திருக்கிறது.

அதாவது, தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் கடந்த 1 ஆம் தேதி வரை திறக்கப்பட்டன. 

அதனையடுத்து, நடிகரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், கோவை ஆனைமலை அருகே ஒரு படப்பிடிப்பில் கலந்துகொண்டிருந்தார்.

அப்போது, உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது நண்பரும் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியும், ஆனை மலை அருகே இருக்கும் பெத்த நாயக்கனூர் பள்ளியை பார்வையிட சென்றனர்.

அந்த நேரத்தில், அங்குள்ள பள்ளிக்கூடத்தின் வாசல் அருகே இருவரும் நடந்து வந்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில், அந்த பள்ளியிலிருந்து வெளியே செல்வதற்காக சிறுவன் ஒருவன், பாதி வகுப்பிலிருந்து வெளியே வந்தான். 

அந்த பள்ளியின் கேட்டின் அருகே வந்த அந்த சிறுவன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் ஆகிய இருவரையும் பார்த்து அதிர்ச்சியடைந்து அப்படியே அங்கேயே நின்றான்.

அத்துடன், அவர்கள் இருவரையும் மேலும் கீழும் ஒரு முறை பார்த்துவிட்டு, அந்த சிறுவன் வேறு எதுவும் பேசாமல் நின்ற நிலையில், அந்த சிறுவனைப் பார்த்து பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ், “உன்னைய பார்க்கத் தான் உதயநிதி வந்து உள்ளார்” என்று, கூறியிருக்கிறார். 

இதனைக் கேட்ட சிறுவன், மறுகனவே தனது வகுப்பறையை நோக்கி திரும்பி சென்றான். 

இந்த நிலையில் தான், இது தொடர்பான மீம் வீடியோவை வெளியிட்டுள்ள மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா, “மாணவர்கள் சார்பாக பள்ளி கல்வித் துறை அமைச்சர் அவர்களை வன்மையாக கண்டிக்கிறோம்” என்று, கிண்டலாக குறிப்பிட்டு இருந்தார். இது பெரும் வைரலாகி வருகிறது.

ஆனால், அந்த சிறுவன் பள்ளியை விட்டு வெளியே செல்லும்போது அமைச்சரின் கண்ணில் பட்டது உண்மை என்றாலும், அவன் பள்ளியை கட் அடித்தான் என்பது இன்றும் உறுதி செய்யப்படவில்லை.