கோவை காளப்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் கணினி ஆய்வகத்தைக் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

anbilகோவை 12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை வழக்கில், பள்ளி நிர்வாகம் மழுப்பலான பதில் அளித்துள்ளது. அது திருப்திகரமாக இல்லை. அதற்குள் காவல்துறை துரிதமாக நடவடிக்கை எடுத்தது என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் கணினி ஆய்வகத்தைக் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் :  சி.எஸ்.ஆர்,  மூலம் அரசுப்பள்ளி மாணவர்களுக்காக  கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. சி.எஸ்.ஆர், பணிகளுக்காக  இணையத்தளம் தயாராகி வருகின்றது.  அது நிறைவேறும் பட்சத்தில், பள்ளிக்கு சிறிய தேவையும் நிறைவேற்றப்படும் என்று பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். 

இதனை தொடர்ந்து பேசிய அவர் 12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை வழக்கில் உடனடியாக முதன்மை மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை நடத்தி உள்ளார். ஆனால் பள்ளி நிர்வாகம் மழுப்பலான பதில் அளித்துள்ளது. அது திருப்திகரமாக இல்லை என்பதால்  அதற்குள் காவல்துறை துரிதமாக நடவடிக்கை எடுத்தது. குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கபடுவார்கள், மேலும் போதிய விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது. அதனால் அரசின் உதவி எண்ணான 14417 அழைக்க சொல்கிறேன். மேலும், பள்ளியில் safety box வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக மாணவர்கள் புகார் தெரிவிக்க ஒரு பெண் ஆசிரியர் தலைமையில் மேலாண்மை குழு ஒன்று அமைக்கப்படும் என்றும்  அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிலையில்  பள்ளி கூடங்கள் முழுமையாக செயல்பட துவங்கவில்லை என்பதால்  நவம்பர் 19 ஆம் தேதி இத்திட்டத்தை தொடங்க உள்ளதாக இருந்தோம். அது வரும்போது ஆசிரியர், பெற்றோர், மாணவர்கள் என அனைவருக்கும் இத்திட்டம் பயனுள்ளதாக இருக்கும். மேலும் கொரோனா காரணமாக 85% கட்டணம் வாங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களிடம் கட்டணம்  பெற கூடாது என உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆனால் சில கட்டாயப்படுத்துவதாக வரும் புகாரின் போது, பள்ளிக்கல்வி துறை மூலம் எச்சரிக்கப்படுவார்கள் . மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபட்டால் பள்ளியின் அங்கீகாரம் மேல் கேள்விக்குள்ளாக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  தெரிவித்தார்.