தேசிய பத்திரிகை நாளான இன்று பத்திரிகையாளர்கள் ஊடகவியலாளர்களுக்குக் முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.

stalinநாடுமுழுவதும் இன்று தேசிய பத்திரிகை தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனையடுத்து, பல்வேறு தலைவர்களும், மாநில முதல்வர்களும் பத்திரிகையாளர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படும் பத்திரிகைகளில் பணியாற்றுபவர்களை போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16 ஆம் தேதி தேசிய பத்திரிகை நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியப் பத்திரிக்கை சபை தோற்றுவிக்கப்பட்ட நாள் நவ-16 தேசிய பத்திரிகை நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில்  நாடு முழுவதும் உள்ள பத்திரிகையாளர்களுக்கு பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.   முதல்வர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், துணிவுடன் அறம் காக்க போராடும் பத்திரிகையாளர்களைப் போற்றும் நாள் இன்று, உண்மையின் பக்கம் நின்று மக்களின் குரலாய் ஒலிக்கும் ஊடகங்கள் மக்களாட்சியின் நான்காவது தூணாக விளங்குகின்றன, நேர்மையும் நெறியும் தவறாது பணியாற்றும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் பத்திரிகையாளர் தின வாழ்த்துகள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.