தமிழ் திரையுலகின் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராகவும் நடிகராகவும் வலம் வரும் ஜீவி பிரகாஷ் குமார் அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான இயக்குனர் மதிமாறன் இயக்கத்தில் செல்ஃபி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

முன்னதாக இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் குமார் நடித்த ஜெயில் திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் வெளியிடுகிறது. மேலும் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் நடித்த இடிமுழக்கம் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

முன்னதாக Axess ஃபிலிம் ஃபேக்டரி,G.டில்லிபாபு தயாரிப்பில் இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் பேச்சுலர். இப்படத்தில் திவ்யபாரதி கதாநாயகியாக நடிக்க முனீஸ்காந்த், பகவத் பெருமாள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார் பேச்சுலர் படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் இத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது. பேச்சுலர் திரைப்படம் வருகிற டிசம்பர் 3ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.